More
Categories: Cinema News latest news

சேலைக்குனு தனி அபார்ட்மெண்டா? ரகசியங்களை பகிர்ந்து ரசிகர்களின் வயித்தெறிச்சலுக்கு ஆளான ரட்ஷிதா

Ratchitha BiggBoss: சின்னத்திரையில் ஒரு காலத்தில் லேடி சுப்பர் ஸ்டார் என்றால் அது ரட்சிதாதான். அந்தளவுக்கு அதிகளவு ஃபேன்ஸ் பாலோயர்களை வைத்து சுற்றிகொண்டிருக்கும் நடிகையாக இருந்தார் ரட்சிதா. சரவணன் மீனாட்சி தொடர் இவரின் வாழ்க்கையை பிரகாசப்படுத்தியது.

அழகான தோற்றம், சிரிப்பு என அனைவரையும் ரட்சிதாவின் அழகு ஈர்த்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரட்சிதாவுக்கு அவரின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: செகண்ட் சிங்கிள் லேட்டானதுக்கு காரணம் இதுதானா? அனிருத்துக்கும் விஜய்க்கும் இடையே இப்படி ஒரு மோதலா?

கணவரை பிரிந்து விவாகரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் பிரச்சினை இருக்கும் போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரட்சிதா.

அதன் மூலம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார். இருந்தாலும் இன்னும் கணவருடனான கருத்து வேறுபாடு குறித்த கேஸ் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

இந்த நிலையில் எப்போதும் சேலையுடனேயே இருக்கும் ரட்சிதாவிடம் உங்களிடம் ஒரு 1000 சேலை இருக்குமா? என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. இல்லை. இல்லை. 5000 சேலைகளை வைத்திருக்கிறேன் என்று ஒரு ஷாக்கிங்கான செய்தியை கூறினார்.

அதற்காக பெங்களூரில் 3 படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கியிருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் வைத்திருக்கும் சேலைகள் எல்லாம் மிகவும் விலையுயர்ந்த சேலைகளாம். பெரும்பாலும் காட்டன் சேலைகளைத்தான் விரும்புவாராம்.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி: தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!

அவர் வைத்திருக்கும் சேலைகளில் ஒரே ஒரு சேலை  மட்டும்தான் விலையுயர்ந்ததுதாம். அந்த சேலையின் விலை ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாயாம். இதை பார்த்த ரசிகர்கள் எவ்ளவோ பிரச்சினைகள் இருக்கும் போது இதெல்லாம் இப்போ தேவைதானா? என்று கமெண்ட்டில் கூறிவருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தன்னிடம் உள்ள சேலை யாருக்காவது பிடிக்கும் என்றால் உடனே அதை ஆன் லைனில் விற்பனை செய்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார் ரட்சிதா.

Published by
Rohini

Recent Posts