கூடிய சீக்கிரம் சினிமா அழிஞ்சிறும்...! வயித்தெறிச்சலில் திட்டி தீர்க்கும் மிகப்பெரிய பிரபலம்...

பிரபு, விஜயகாந்த் கால சினிமா காலங்களில் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வில்லன் கதாபாத்திரங்களில் டஃப் கொடுக்கும் பாத்திரங்களில் ஒருவர் நடிகர் ராதாரவி. இவரின் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் ரோல்களில் மட்டுமே நடித்து பேர் பெற்றவர்.
சின்னத்தம்பி படத்தில் மூத்த அண்ணனாக இடம் பெற்று கதைக்கு ஒரு கருவாக அந்த படத்தில் இடம் பெற்றிருப்பார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் விஜய் நடித்த சர்கார் படத்திலும் வில்லனன் ரோலில் சைடு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.
மீடியாவில் கொஞ்சம் கூட பாரபட்சம் பார்க்காமல் பிடிக்காதவர்களை பற்றி யாரை பற்றியும் கவலை படாமல் தன் பாட்டுக்கு திட்டி தீர்த்து விடுவார். இப்படி ஒரு விழா மேடையில் ஐசர் கணேசனை பெருமிதமாக பேசி கொண்டிருக்கும் இவர் அண்மையில் நடிகர் சங்க தேர்தலில் விசால் தலைமையிலான பாண்டவ்ர் அணி வெற்றி பெற்றதை மனதில் வைத்து கொண்டு எல்லாரையும் பொதுவாக திட்டினார்.
இதையும் படிங்களேன்: அந்த கட்சியில சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுறேன்! – அரசியலில் குதிக்கும் ஷகீலா
அதே போல் வரும் காலங்களில் சினிமா என்ற ஒன்னே இருக்காது, அழிஞ்சிறும் எனவும் கூறினார். எல்லா படங்களும் ஓடிடியில் வெளியாவதால் பாலாபிஷேகமும் இருக்காது நடிகர்களுக்கான சம்பளமும் குறையும் எனவும் கூறி அதெல்லாம் நடக்கனும் ஆசைபடுகிறேன் என சொல்லி முடித்தார்.