அட்ஜெஸ்ட்மென்ட் இல்லைனா சினிமாவில் பொழப்பு ஓட்ட முடியாது.! இப்படியா வெளிப்படையா பேசுவீங்க ராதாரவி.?!
தமிழ் திரையுலகில் செயல்படும் பல சங்களுக்கும் அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறும். அந்த தேர்தல் சலசலப்புகள் தமிழக பொதுத்தேர்தல்களை விட பரபரப்பாகவே பேசப்படும். அந்தளவுக்கு சினிமா செய்தியாளர்களுக்கு கன்டென்ட் கிடைக்கும்.
இயக்குனர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதில் ஆர்.கே.செல்வமணி தரப்பு ஒரு அணியாகவும், இன்னோர் தரப்பு கே.பாக்யராஜ் தலைமையிலான ஓர் அணியும் போட்டியிட்டது. அதில், ஆர்.கே. செல்வமணி அணி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்களேன் - என்ன கேக்காமலேயே எல்லாம் செஞ்சிட்டாங்கய்யா.! பொது மேடையில் வருத்தப்பட்ட விஜயின் தந்தை.!
இதன் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி என பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய ராதாரவி தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசினார். அவர் எப்போதுமே அப்படிதான் பேசுவார்.
அப்போது நான் ஒரு கட்சியை சேர்ந்தவன். (அவர் பாஜக ) அதே போல இங்குள்ள முக்கிய விருந்தினராக வந்து இருப்பவரும் எனது கட்சிக்காரர். அதே போல, மன்னவன் அவர் மாநில ஆளும் கட்சியை சார்ந்தவர் அவருடனும் இணக்கமாக போக வேண்டும். மத்திய மாநில அரசு மற்றும் மாநில அரசு இரண்டையும் அட்ஜெஸ் செய்து போனால் தான் நம்ம சங்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கேட்டு பெற முடியும். என வெளிப்படையாக பேசி முடித்தார்.