விஜயகாந்த் இறப்புக்குப் பிறகு அப்படி ஒரு ஃபீலிங்காம்.... மனதளவில் நொந்து போன ராதாரவி

by sankaran v |   ( Updated:2024-08-18 11:33:59  )
vkrr
X

vkrr

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது வள்ளல் தன்மை தான். எம்ஜிஆருக்குப் பிறகு அவரை மக்கள் இன்றளவும் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களே அப்படி இருந்தால் அவரது ஆருயிர் நண்பர்களான வாகை சந்திரசேகர், ராதாரவி, எஸ்எஸ்.சந்திரன், பாண்டு, தியாகு ஆகியோருக்கு எப்படி இருக்கும்?

இவர்களது நட்பு சினிமாவையும் தாண்டி பல பொது விஷயங்களிலும் இருந்து வந்தது. குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது, போராட்டம் பண்றதுன்னு ஊர்வலம் போனோம் என்கிறார் ராதாரவி.

அவர்களில் ஒருவரான ராதாரவி தனக்கு விஜயகாந்த் இறப்பால் இப்போது அப்படி ஒரு ஃபீலிங் வருகிறது என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் என்னென்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

vijayakanth ratharavi

vijayakanth ratharavi

ராதாரவி சொல்வது என்னன்னா விஜயகாந்த் அப்போதே அவரது கட்சி அலுவலகத்தில் யார் எப்போது வந்தாலும் சாப்பாடு கொடுத்துக் கொண்டே இருப்பாராம். அவர்களைப் பற்றி யாரு, என்னன்னு விவரமே கேட்க மாட்டார்களாம். சாப்பிட்டாயா என கேட்பதற்கே ரெண்டு பேர் இருப்பார்களாம்.

அவர்கள் யாராக இருந்தாலும் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்ளோ பெரிய தர்மகர்த்தாவுக்கு இந்த மாதிரி ஒரு ஆகியிருக்கக்கூடாது. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருந்தாலும் கடவுள் யார் யாரையோ மன்னிக்காரு. இவரை மன்னிக்கிறதுக்கு என்ன? நான் வந்து கடவுளை எல்லாம் கும்பிடறதுலாம் உண்டு. ஆனா விஜயகாந்த் இறப்புக்குப் பிறகு கொஞ்சம் நான் சோலோவா ஆன மாதிரி ஃபீல் பண்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் எந்த அளவுக்கு அவர் மனதில் இருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஒரு நண்பரின் இழப்பு அவரைத் தனிமைப்படுத்தியது போல தெரிகிறதாம். அன்னை பூமி, காந்தி பிறந்த மண், புதுப்பாடகன், வீரம் வெளஞ்ச மண்ணு, ராஜநடை, வீரபாண்டியன், உளவுத்துறை, கரிமேடு கருவாயன், வைதேகி காத்திருந்தாள், நீதியின் மறுபக்கம், கூலிக்காரன், நினைவே ஒரு சங்கீதம், உழவன் மகன், நரசிம்மா, பொன்மனச்செல்வன், புலன் விசாரணை, கண்ணுபட போகுதையா, என் ஆசை மச்சான், அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான் உள்பட பல படங்களில் விஜயகாந்த் உடன் ராதாரவி இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story