
Cinema News
விஜயை விட அஜித் மீது இவ்ளோ நம்பிக்கையா? குட் பேட் அக்லிக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் பிரபலம்
குட் பேட் அக்லி படத்தைப் பொறுத்த வரைக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் அஜித்தை பிரேமுக்கு பிரேம் ரசித்து ரசித்து காட்டியிருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ஒரு ரசிகராக இருந்து படத்தை எப்படி கொண்டாடுவோமோ அப்படி கொண்டாடும் வகையில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு முதல் சிங்கிளும் சமீபத்தில் தான் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையில் இதனுடைய முதல் பாடல் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அவரை பொறுத்த வரைக்கும் இந்த பாடலில் தனக்கு உடன்பாடே இல்லை. என்னை அந்த அளவு கவரவில்லை எனக் கூறினார். ஒருவேளை அனிருத் இந்த படத்தில் இருந்தால் இன்னும் பாடல் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக அமைந்திருக்கும் .அதுவும் விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட சறுக்கல். அதை எப்படியாவது போக்க வேண்டும் என்பதற்காகவே அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி தீர வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் வியாபாரம் பற்றியும் இவர் பேசியிருக்கிறார்.
இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருக்கிறாராம். ரோமியோ பிக்சர்ஸை பொறுத்த வரைக்கும் இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கோட் படத்தை அவர்தான் ரிலீஸ் செய்தார். இப்போது இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். பொதுவாகவே இந்த மாதிரி பெரிய தொகை கொடுத்து வாங்குகிற ஒரு படத்தை உதாரணமாக தமிழ்நாடு தியேட்டரிக்கல் ஒரு 50 கோடிக்கு வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் வட்டி லாபம் எல்லாம் கணக்கு போட்டு ஏரியா வாரியாக பிரித்து ஒரு பத்து கோடி லாபம் வருகிற மாதிரி விற்று விடுவார்கள்.
அதுதான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு. அதே நேரம் சில நேரங்களில் எம்ஜி-க்கு கொடுத்து விடுவார்கள். அது படம் வெற்றியடைந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில் அந்த மாதிரியும் செய்வார்கள். ஆனால் இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை வாங்கி இருக்கிற ரோமியோ பிக்சர்ஸ் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே அவரே நேரடியாக தியேட்டரை எடுக்கிறார். இது ஒரு வகையான ரிஸ்க். அதற்கு காரணம் என்னவெனில் அந்த படத்தின் மீது அவருக்கு இருக்கிற நம்பிக்கை.
ஏனெனில் இந்தப் படம் தப்பு பண்ணாது. கமர்சியலாக இருக்கும். அதனால் கண்டிப்பாக இந்த படம் நமக்கு லாபம் தரும் அப்படி என்ற நம்பிக்கையில் தான் அந்த படத்தை அவரே நேரடியாக தியேட்டர் எடுத்திருக்கிறார். கோட் படத்தை விட இந்தப் படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன் எடுக்க போவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது .அதனால் நிறைய தியேட்டர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல கர்நாடகா மற்றும் கேரளா தியேட்டரிக்கல் உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸ் தான் வாங்கி இருக்கிறார்கள். அதனால் இந்த படத்திற்காக இவர் பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என பிஸ்மி கூறினார்.