ஒருத்தனாவது காசு போடுறானா பாரு... இது என்னடா ரவீனாவுக்கு வந்த சோதனை!

சின்னத்திரை நாயகியாக வலம் வரும் ரவீனா தாஹா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு ரீல்ஸ் வீடியோவை தான் தற்போது நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கதை சொல்லப் போறோம் என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக ரவீனா தாஹா அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’ராட்சசன்’ பொன்ற ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சின்னதிரையை பொருத்தவரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பெரும் அளவில் மக்களை கவர்ந்த ’பூவே பூச்சூடவா’ எனும் சீரியலில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2யில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி நடன நிகழ்ச்சிகளிலும் தன் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் தன்னை எப்போதும் அக்டிவாக வைத்துக்கொள்ளும் ரவீனா, இன்ஸ்டா பக்கத்தில் ரொம்பவே பிசியாக இருப்பார். குட்டை ஆடைகள் முதல் குத்து விளக்கு ஆடைகள் என அம்மனி பகிரும் அனைத்து புகைப்படங்களுக்கும் ஹார்டியன்களை பறக்க விடுகின்றனர் ரசிகர்கள். தினமும் ஒரு ரீல்ஸ்வாது ரிலிஸ் செய்துவிடுவார். அந்த வகையில், தற்போது பொது இடத்தில், ’மே மாதம் 98யில் மேஜர் ஆனேனே’ என்ற ஹிட் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார், அதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் வறுத்து எடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோ பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க....

 

Related Articles

Next Story