கோலிவுட்டின் அடுத்த சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் சூர்யாவா? யார் டைரக்டர் தெரியுமா?

by Akhilan |
கோலிவுட்டின் அடுத்த சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் சூர்யாவா? யார் டைரக்டர் தெரியுமா?
X

Suriya: கோலிவுட்டில் தற்போது பெரிய பிரேக்கில் இருக்கும் சூர்யாவின் கையில் ஏகப்பட்ட படம் கைவசம் இருக்கும் நிலையில், தற்போது மற்றொமொரு திரைப்படமும் பட்டியலில் இணைய இருக்கிறதாம். அந்த செய்தி கேட்டு தற்போது ரசிகர்கள் செம சந்தோஷமாகி இருக்கிறார்கள்.

பெரும்பாலும் கோலிவுட்டில் ஆக்‌ஷன், காதல் கதை ஜானரில் தான் அதிக படங்கள் வெளிவந்தது. இதில் சயின்ஸ் பிக்‌ஷன் கதை ரொம்பவே அரிது. அப்படி பெரிய பட்ஜெட் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் இன்று நேற்று நாளை. இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. படத்தினை இயக்கியவர் ராஜ்குமார். இவரும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமே உதவி இயக்குனராக கோலிவுட்டுக்குள் வந்தவர்.

இதையும் படிங்க: ஒருவழியா மாமா வந்தாச்சு!.. ரொம்ப சிரிக்காதீங்க விஜயா… அப்புறம் மொக்க வாங்குவீங்க…

முதலில் சூது கவ்வும் படத்தில் நலன் குமாரசாமியிடன் வேலை செய்தார். இதை தொடர்ந்து அவர் இயக்கிய இன்று நேற்று நாளை ஹிட் கொடுத்தது. அதையடுத்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் அயலான். கிட்டத்தட்ட 9 வருடம் கழித்து ரிலீஸான அயலான் மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. படம் கிட்டத்தட்ட 50கோடிக்கும் அதிகமான வசூல் செய்து விட்டது.

குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருப்பதால் படத்திற்கு குடும்ப ரசிகர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்த ஹிட்டால் தற்போது ரவிகுமாருக்கு அடுத்து சூர்யா படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறதாம். அயலான் படத்தின் விஎஃப்எக்ஸை பார்த்து ஏற்கனவே சூர்யா மிகவும் பாராட்டி இருந்தாராம். அதை தொடர்ந்து சூர்யாவை பார்த்த ரவிக்குமார் இன்னொரு சயின்ஸ் பிக்‌ஷன் கதையை சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: இங்க என்னடா இரண்டு சங்கமம் நடக்குது!.. கோபிக்கு ஒன்னு, பாக்கியாவுக்கு ஒன்னா? அடடே!…

Next Story