கேப்டனுக்கு கொடுக்க வேண்டிய 7 லட்சம் பாக்கி - சும்மா இருப்பாரா? ராவுத்தர் செய்த செயல்!
கோலிவுட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த ஒரு மக்கள் செல்வாக்கை அதிகமாக பெற்றவர் நடிகர் விஜயகாந்த் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கூறி நாம் கேட்டிருக்கிறோம். எம்ஜிஆர் இருக்கும் வரை என்னென்ன உதவிகள் நற்செயல்கள் செய்தாரோ அதை அப்படியே தன் வாழ்க்கையில் கடைபிடித்தவர் ஆக விஜயகாந்த் இருந்தார்.
எம்ஜிஆர் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது சாப்பாடு. யார் எந்த நேரத்தில் போய் நின்றாலும் அவரை முதலில் வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர் எம்ஜிஆர். அதை அப்படியே பின்பற்றியவர் விஜயகாந்த். தான் பணியாற்றும் யூனிட்டுகளிலும் தனக்கு எந்த சாப்பாடு வருகிறதோ அதே சாப்பாட்டை தான் மற்றவர்களுக்கும் கொடுக்க சொல்லுவாராம் விஜயகாந்த்.
இப்படி மக்கள் மனதை கொள்ளை கொண்டவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கோவை தம்பி விஜயகாந்த் பற்றியும் அவருடைய நண்பரான ராவுத்தர் பற்றியும் ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியிருக்கிறார்.
விஜயகாந்த் மக்கள் நலனை பேணுபவர் என்று கோவை தம்பி கூறிய நிலையில் இன்னும் மற்றும் ஒரு சம்பவத்தை கூறினார். அதாவது விஜயகாந்தை வைத்து உழைத்து வாழ வேண்டும் என்ற படத்தை தயாரித்தாராம் கோவை தம்பி. ஆனால் அந்தப் படம் சரிவர போகாததால் வசூலிலும் மண்ணை கவ்வி இருக்கிறது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொடுக்க வேண்டிய ஏழு லட்சம் தொகை பாக்கியாக வைத்திருந்தாராம் கோவை தம்பி. உடனே ராவுத்தரிடம் கோவை தம்பி "இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை "என்றுதான் சொன்னாராம். உடனே ராவுத்தர் "சரி நான் போய் கேப்டனிடம் கூறுகிறேன்" என்று சொல்லிவிட்டு போனாராம்.
ஆனால் போனவர் அதன் பிறகு திரும்பி வரவே இல்லையாம். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த கோவை தம்பி "விஜயகாந்த் வைரம் என்றால் ராவுத்தர் தங்கம் "என்று சொல்லி அந்த சம்பள பாக்கி பற்றி இதுவரை என்னிடம் விஜயகாந்தோ ராவுத்தரோ கேட்டதே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறினார்.