தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் வித்தியாச நடைமுறை... இதை செய்தபிறகு தான் ஹீரோவை செலக்ட் செய்வாராம்...
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி திரைப்படங்களில் ஹீரோவை தேர்வு செய்யும் முன்னர் இதை கண்டிப்பாக ஃபாலோ செய்வதையே வழக்கமாக வைத்திருக்காராம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆர்.பி.சௌத்ரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ளார்.
புது வசந்தம் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக எண்ட்ரி கொடுத்தவர் ஆர்.பி.சௌத்ரி. இவர் நிறுவனம் இதுவரை தயாரித்த படங்கள் 100ஐ நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆர்.பி.சௌத்ரி நிறுவனம் ஒரு படத்தினை தேர்வு செய்வதற்கு முன்னர் சௌத்ரி அந்த கதையை முழுமையாக கேட்பாராம். அவருக்கு பிடித்தால் மட்டுமே ஓகே செய்து நடிகரிடம் கதை சொல்ல அனுப்புவாராம். இந்த நடைமுறையை இன்று வரை ஃபாலோ செய்து வருகிறார்.
ஆனால் இன்றைய தயாரிப்பாளர் எல்லாம் நடிகர்களுக்கு கதை பிடித்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். லிங்குசாமி, எழில் மற்றும் பேரரசு உள்ளிட்ட 43 உதவி இயக்குனர்களை இயக்குனராக மாற்றிய ஆர்.பி.சவுத்ரி இன்று வரை கதை கேட்டபின்னரே நடிகரிடம் இயக்குனரை அனுப்புவதாக பேரரசு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ஆர்.பி.சௌத்ரியின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.