உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல கிரைம் திரில்லர் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ஆனால் ஒரு பேய் திரைப்படத்தில் “இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது” என்று டைட்டில் கார்டு வந்தால் நமக்கு பீதியாகிவிடும். உதாரணத்திற்கு ஹாலிவுட்டில் வெளியான “காஞ்சூரிங்” திரைப்படத்தை கூறலாம்.
இந்த நிலையில் தமிழில் இரண்டு திகில் திரைப்படங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்திரைப்படங்கள் என்னென்ன திரைப்படங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
டார்லிங் 2
கடந்த 2016 ஆம் ஆண்டு சதீஷ் சந்திரசேகர் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “டார்லிங் 2”. வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களே இத்திரைப்படம். இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியானபோது இத்திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ், தனது பேட்டி ஒன்றில் ஒரு பகீர் தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது ஒரு முறை சதீஷ், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே அவர்கள் ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாம். ஆதலால் அனைவரும் பயந்துபோய் அந்த சுற்றுலாவையே கேன்சல் செய்துவிட்டு திரும்பி வந்திருக்கின்றனர்.
ஒரு வேளை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனையாக சிந்தித்து “டார்லிங் 2” கதையை எழுதியிருக்கிறார் சதீஷ். இந்த தகவல் கொஞ்சம் திடுக்கிடும் தகவலாகத்தான் இருக்கிறது.
டைரி
கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான “டைரி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படம் சீனாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
1995 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் ஃப்ராக்ரன்ட் ஹில்ஸ் என்ற பகுதிக்கு செல்லும் 375 என்ற எண் கொண்ட பேருந்து இரவு நேரத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் ஒரு மூதாட்டி, ஒரு காதல் ஜோடி, பின் ஒரு இளைஞர் ஏறியுள்ளனர்.
பேருந்து சிறிது தூரம் சென்றவுடன் பழங்கால சீன உடைகளை அணிந்த மூன்று பேர் ஏறியுள்ளனர். அதில் ஒருவர் தலையை தொங்க போட்டபடி இருந்திருக்கிறார். அவர்கள் மூவரும் கடைசி சீட்டில் சென்று அமர்ந்திருக்கின்றனர்.
சிறிது நேரத்தில் அந்த பேருந்தில் இருந்த மூதாட்டி ஒருவர் தனது பர்ஸை தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞன் திருடிவிட்டதாக குற்றம்சாட்டி, அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு அந்த பேருந்தில் இருந்து இறங்கிவிடுகிறார்.
அப்போது அந்த இளைஞன், “நான் உங்கள் பர்ஸ்ஸை திருடவில்லை” என கூற, அதற்கு அந்த மூதாட்டி, “என்னை மன்னித்து விடுங்கள், அந்த பேருந்தில் கடைசி சீட்டில் இருந்த மூவருக்கு கால்கள் இல்லை. அவர்கள் பேய்கள் என நினைக்கிறேன். ஆதலால்தான் இப்படி ஒரு நாடகம் நடத்தி உங்களை இறக்கிவிட்டேன்” என கூறியிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் அந்த பேருந்து காணாமல் போனதாக செய்தி வந்திருக்கிறது. அந்த மூதாட்டி இறங்கிய இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு நதியில் அந்த பேருந்து கவிழ்ந்து கிடந்ததாம். அதில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உட்பட 5 பேரின் சடலங்களை மீட்டிருக்கின்றனர். ஆனால் அந்த கடைசி சீட்டில் இருந்த நபர்களின் உடல் கிடைக்கவில்லையாம்.
மேலும் அந்த பேருந்தில் 100 கிலோ மீட்டர் தூரம் போகும் அளவுக்கான போதுமான டீசல் அதில் இல்லையாம். பின் எப்படி 100 கிலோ மீட்டர் போனது என்பது மர்மமாகவே இருக்கிறதாம். மேலும் அந்த பேருந்தின் டீசல் டேங்கை திறந்து பார்த்தபோது அதில் ரத்தம் இருந்ததாம். இந்த சம்பவம் இப்போதும் சீனர்கள் மத்தியில் மர்மமாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: வைரமுத்து வீட்டில் நடந்த கல்லெறி தாக்குதல்… இனி இப்படி பண்ணவே கூடாது… கவிப்பேரரசு எடுத்த முக்கிய முடிவு…
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…