மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ரியல் ஹீரோ இவர்தான்!.. நண்பேன்டா ஸ்டைலில் கலக்குறீங்களே!..
Manjummel boys: மலையாளத்தில் கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தினை தற்போது கோலிவுட் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து பாராட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட மஞ்சும்மெல் ரியல் பாய்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் கேரளாவை விட தமிழ்நாட்டில் தான் அதிக அளவு வசூலை குவித்து வருகிறது. ஷோக்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். இப்படத்தின் கதைக்கு முக்கிய காரணம் குணா குகை என்றால் இன்னொரு அந்த நட்பு தான்.
படத்தினை பார்க்க போகும் முன்னர் இதை தெரிஞ்சிக்கொள்ளுங்கள். 2006ம் ஆண்டு கொடைக்கானலுக்கு 11 பேர் சேர்ந்த நண்பர்கள் குழு செல்கின்றனர். அப்போது அங்கிருந்தவர்களில் சுபாஷ் என்பவர் குணா குகைக்குள் சிக்கி கொள்கிறார். உடனே நண்பர்கள் அருகில் இருந்த காவல்துறையினரிடம் உதவி கேட்டு இருக்கின்றனர்.
அதை தொடர்ந்து மீட்புக்குழு அங்கு வந்து தங்களால் ஆன வேலைகளை செய்து பார்க்கின்றனர். இருந்தும் அந்த குழிக்குள் இறங்க அதிகாரிகளே தயங்கினார்களாம். அதனால் அவர்கள் எங்கள் உயிருக்கு ஆபத்து என பின் வாங்க கூட்டத்தில் இருந்த நண்பர் சிஜு முன்வந்தாராம்.
அவர் தைரியமாக குழிக்குள் இறங்கி நண்பரை மீட்டு வந்தாராம். மஞ்சும்மெல் படத்தின் தயாரிப்பாளர் ஷாபின் சாகிர் இப்படத்தின் சிஜூ கேரக்டரில் நடித்து இருக்கிறார்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரோம்ஷாம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் மாஸ் ஹிட்டாகி தற்போது தொடர் வசூலை குவித்தும் வருகின்றது. இதை தொடர்ந்து ரியல் சுபாஷ் மற்றும் சிஜு புகைப்படம் இணையத்தில் வருகிறது.