மொட்டை ராஜேந்திரனுக்கு முடி எப்படி கொட்டிப்போனது தெரியுமா?!.. அடப்பாவமே!...

தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் அடியாட்களில் ஒருவராக பல படங்களில் நடித்தவர் ராஜேந்திரன். இயக்குனர் பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் டெரர் வில்லனாகவும் கலக்கியிருந்தார். அதன்பின் இவர் காமெடி வேடங்களில் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், டார்லிங், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே முழுநேர காமெடி நடிகராக மாறினார்.

mottai
குறிப்பாக ஹாரர் காமெடி திரைப்படம் என்றால் இவர் கண்டிப்பாக இருப்பார். இவரை பார்த்தாலே சிரித்துவிடும் அளவுக்கு ரசிகர்களை மாற்றியுள்ளார். மொட்டை தலைதான் இவரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், இவர் பிறந்தது முதலே இப்படி இல்லை என்பதே உண்மை.
இவர் சண்டை நடிகராக நடித்தபோதெல்லாம் மற்றவர்களுக்கு இருப்பது போலவே இவருக்கு முடி இருந்தது. ரெட் இந்தியன் என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்துகொண்டிருந்த போது, கதாநாயகனிடம் அடி வாங்கி இவர் ஒரு குளத்தில் விழுவது போல காட்சி எடுத்தார்கள். அத குளத்தில் ரசாயன நீர் தேங்கியிருந்தது. அதில் விழந்ததால் அவருக்கு முடிகள் கொட்ட துவங்கியது. நிறைய முடிகள் கொட்டிவிடவே மொட்டை அடித்துக்கொண்டு திரைப்படங்களில்நடிக்க துவங்கினார். தற்போது அதுவே அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது.
இதையும் படிங்க: அன்னைக்கு மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா?? கமல்ஹாசனின் கேரியரில் நடந்த முக்கிய சம்பவம் இதுதான்…