லண்டன் சந்திப்பு!… விஜய்க்கு அஜித் அழைப்புவிடுத்ததன் பின்னணி.. இவ்ளோ இருக்கா?!..

லண்டனில் விஜய் – அஜித் சந்தித்து கொண்டதன் பின்னணி..

vijay ajith

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சமீபத்தில் லண்டன் சென்ற போது அங்கு அஜித்குமாரின் டீம் கலந்து கொண்ட லி ஜோன்ஸ் கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்தது.

30 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வந்த விஜயும், அஜித்தும் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பு பரிமாறிக் கொண்ட சம்பவம் விஜய், அஜித் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் தற்போது கிளாடியேட்டர்ஸ் என்கிற ஆவண படத்தில் நடித்திருக்கிறார்.

இது அஜித்தின் கார் ரேஸ் வாழ்க்கை தொடர்பான ஆவணப் படமாகும். இந்த படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்களும் பேசியிருக்கிறார்கள். அனேகமாக இதில் விஜய் கொடியசைத்து கார் ரேஸ் போட்டியை தொடங்கி வைத்த காட்சிகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் அஜித்தின் தாயார் மறைந்த போது முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இறுதிச்சடங்கு எந்த தடங்கலும் இல்லாமல் சுமூகமாக நடப்பதற்கு அரசு அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதில் அஜித் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

எனவே அவருடைய அழைப்பின் பெயரில்தான் லண்டனில் நடந்த லீ மேன்ஸ் கார் ரேஸ் போட்ட்டியை விஜய் பார்வையிட்டார் என சொல்லப்படுகிறது . மேலும் சில்வர் ஸ்டோன் பந்தயம் மைதானத்தின் அரங்கத்தையும், அதன் தொழில் நுட்பங்களையும் நேரில் பார்த்து விஜய் தெரிந்து கொண்டார் என சொல்கிறார்கள். விரைவில் அது போன்ற ஒரு அரங்கமும், அமைப்பும் தமிழகத்திலேயே உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஏற்கனவே சட்டசபையில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை தமிழகத்தில் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →