விஜய் ஹீரோன்னா நான் ஒத்துக்கணுமா?!.. படமே வேண்டாம்!.. விலகிய முருகதாஸ்!.. நடந்தது இதுதான்!..
தமிழ் சினிமாவில் தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே சூப்பர் ஹிட். அடுத்து விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் முருகதாஸ் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை ரசிகர்களுக்கும் காட்டியது.
சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார். கஜினி படம் சூப்பர் ஹிட் அடிக்க அதை ஹிந்திக்கு சென்று அமீர்கானை வைத்து எடுத்தார். அங்கும் அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. துப்பாக்கி கதையை அவர் முதலில் எடுக்கவிருந்தது ஹிந்தியில்தான். அக்ஷய் குமார் ஹீரோவாக நடிப்பது உறுதியானது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தை துவங்க முடியவில்லை.
இதையும் படிங்க: மனைவி உயிருக்கு போராட 15 லட்சம் கொடுத்து உதவிய ரஜினி! ‘லால் சலாம்’ பட நடிகர் கண்ணீர் மல்க பேட்டி
எனவேதான், தமிழில் விஜயை வைத்து துப்பாக்கியை எடுத்தார். இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட் அடிததால் மீண்டும் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து எடுத்தார். துப்பாக்கி பின் விஜயை வைத்து கத்தி படத்தையும் முருகதாஸ் இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
அதேநேரம், கத்தி படத்திற்கு பின் முருகதாஸ் இதுவரை ஹிட் கொடுக்கவில்லை. மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர் படம் ஓடவில்லை. ரஜினியை வைத்து அவர் இயக்கி தர்பார் படமும் ஓடவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் குறைந்துபோனது. அப்போதுதான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸை தேடி வந்தது.
இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா…
தர்பார் படம் தோல்வி அடைந்திருந்த நேரம் அது என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு குறைவான சம்பளம் பேசியது. ஆனால், அதை முருகதாஸ் ஏற்கவில்லை. அதோடு, அந்த படத்திலிருந்தும் வெளியேறினார். அதன்பின்னர்தான் நெல்சன் உள்ளே வந்து அதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.
இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ஹிட் அடித்தால் முருகதாஸ் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.