மத்தவன் காசு போகலாம்!. நம்ம காசு போகக்கூடாது!. சூர்யா - கார்த்தி எடுத்த அந்த முடிவு!...

நடிகர் சிவக்குமாரின் வாரிசாக திரையுலகில் வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி. நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய சூர்யா பல படங்களில் நடித்தாலும் காக்க காக்க, நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அயன், சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களின் வெற்றி சூர்யாவை ஒரு முன்னணி ஹிரோவாக மாற்றியது. 2டி எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தான் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தார். சூரரைப்போற்று, பீம் சிங் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார்.
அதேபோல் கார்த்தி பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அனுபவப்பட்ட நடிகர் போல நடித்தார். அமீர் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பையா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு, முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
சூர்யா கங்குவா படத்தில் நடித்துவிட்டு இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அவரின் தம்பி கார்த்தியோ சர்தார் 2-வில் நடித்து வரும். துவக்கத்தில் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த சூர்யாவும், கார்த்தியும் ஒரு கட்டத்தில் சொந்த படங்களில் நடிக்க துவங்கினார்கள்.
கார்த்தி பெரும்பாலும் 2டி அல்லது ஞானவேல் ராஜாவின் ஸ்டுயோ கிரீன் நிறுவனத்தில் மட்டுமே நடிப்பார். ஏனெனில், ஞானவேல் ராஜா அவரின் நெருங்கிய உறவினர். அதேபோல்தான் கார்த்தியும். ஸ்டுடியோ கிரீன் அல்லது எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் ஆகியோரின் தயாரிப்பில் மட்டுமே நடிக்க துவங்கினார். சம்பளம் மற்றும் லாபத்தில் குறிப்பிட சதவீதம் என்பதுதான் டீல்.
இந்நிலையில், சூர்யா, கார்த்தி இருவருமே இனிமேல் 2டி, ஸ்டுடியோ கிரீன், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனராம். அதற்கு காரணம் ஓடிடி நிறுவனங்கள் முன்புபோல் அதிக விலை கொடுத்து படங்களை வாங்குவதில்லை. என்பதுதான். இதனால் தன்னுடைய மற்றும் தங்களின் உறவினர்களின் நிறுவனங்கள் நஷ்டமடைய அவர்கள் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
அதாவது மற்ற தயாரிப்பாளர்கள் நஷ்டமடையலாம். ஆனால், நாமோ, நமக்கு வேண்டியப்பட்டவர்களோ நஷ்டம் அடையக்கூடாது என்பதால்தான் இனிமேல் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். நல்ல இருக்குப்பா!..