Cinema News
விஜய் சேதுபதி ஆசைப்பட்டதுக்கு செலவு ஒரு கோடி!.. தயாரிப்பாளர் கிடைச்சா தலையில மிளகாதான்!..
வித்தியாசமான கதைகளில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சூது கவ்வும் படத்தில் அப்படி ஒரு விஜய் சேதுபதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எல்லா நடிகர்களும் 4 பாட்டு, 4 சண்டைக் காட்சி, கதாநாயகியுடன் டூயட் என ஆசைப்படும்போது புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் விஜய் சேதுபதி.
இதனால் நல்ல கதைகளை வைத்திருந்த உதவி இயக்குனர்களுக்கு கடவுளாக தெரிந்தார் விஜய் சேதுபதி. பல அறிமுக இயக்குனர்களின் படங்களில் நடித்தார். பன்ச் டயலாக் பேசாமல், ஒரு அடியில் 10 பேரை பறக்க விடாமல் மனதை வருடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இதனாலேயே இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
இதையும் படிங்க: ’ஹரா’வா இதுக்கு விஜய்யோட ‘சுறா’வே தேவலாம்!.. முடிச்சிவிட்டாய்ங்க!.. மோகன் பட விமர்சனம் இதோ!..
ஆனால், ஒரு கட்டத்தில் அவரும் மற்ற ஹீரோக்களை போல மாறினார். ரெக்க, சங்கத்தமிழன் போன்ற படங்களை பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராகவும் மாறினார். மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக வந்து அதிர வைத்தார்.
சில வருடங்களுக்கு முன்பு மிகவும் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாக விஜய் சேதுபதி இருந்தார். வாரம் ஒரு படம் வெளியாகும் அளவுக்கு அதிக படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அது குறைந்து போனது. மேலும், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், தற்போது அவருக்கே நம்பிக்கை கொடுக்கும்படி உருவாகியுள்ள திரைப்படம்தான் மகாராஜா. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், விஜய் சேதுபதிக்கு ஒரு ஹிட் படமாக மகாராஜா அமையும் என திரையுலகில் பேசுகிறார்கள். இப்படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிப்பாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் ஒளிபரப்பப்பட்டு புரமோஷன் செய்யப்பட்டது. இது விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் இதை செய்ய சொன்னதே அவர்தானாம். 3 நிமிடம் ஒளிபரப்பானதற்கு 75 லட்சம், போக வர விமான செலவு என கிட்டத்தட்ட தயாரிப்பாளருக்கு ஒரு கோடி வரை செலவானதாம்.
சரி ‘இதை சம்பளத்தில் கழிச்சிகோங்க’ என தயாரிப்பாளரிடம் விஜய் சேதுபதி சொல்லி இருப்பார் என நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. அது வேற… இது வேறயாம்!..