good bad ugly
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது இப்படத்தின் டீசர் வீடியோவை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது. ஏனெனில், பல மாஸான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து அஜித் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் பல காட்சிகள் குட் பேட் அக்லியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு அஜித்தின் ரசிகராக ஆதிக் இப்படத்தை இயக்கியிருப்பதால் அஜித்தும் ரசித்து நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, ஏப்ரல் 9ம் தேதி மாலை சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் இப்படத்திற்கு ஒரு பிரீமியிர் காட்சியை திரையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்படி பார்ப்பவர்கள் மொபையில் படம் ஓடும்போது காட்சிகளை எடுத்து வெளியே விடுவார்கள்.
#image_title
இதை வைத்து யுடியூப்பில் படத்தை விமர்சனம் செய்து வீடியோ போடுவார்கள். இது படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் பிரீமியர் ஷோவை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி வருகிறது. அதாவது அன்று அரசு விடுமுறை என்பதால் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அரசியல் அனுமதி வாங்க தேவையில்லை.
எனவே ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிடலாம் என முடிவெடுத்துவிட்டார்கள். அதோடு, அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களுமே 10ம் தேதிதான் வெளியானது. எனவே, அந்த செண்டிமெண்ட்டும் இதில் சேர்ந்திருக்கிறது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
எப்படி இருந்தாலும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே கருதப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…
சமீபகாலமாக லைக்கா…
இந்திய திரைப்பட…
இளையராஜா தமிழ்சினிமா…
Gossip: கோலிவுட்டில்…