கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை பாசமாக வளர்த்தார். சிறுவயதிலேயே அப்பாவின் சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு செல்வது விஜயின் வழக்கம்.. அப்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.. சென்னை லயோலா கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது படிப்பு நமக்கு செட் ஆகாது.. சினிமாவில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார் விஜய். ஆனால் இதை எஸ்.ஏ.சி ஏற்கவில்லை.. அவர் எவ்வளவோ அட்வைஸ் சொல்லியும் […]

sac vijay

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை பாசமாக வளர்த்தார். சிறுவயதிலேயே அப்பாவின் சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு செல்வது விஜயின் வழக்கம்.. அப்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது..

சென்னை லயோலா கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது படிப்பு நமக்கு செட் ஆகாது.. சினிமாவில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார் விஜய். ஆனால் இதை எஸ்.ஏ.சி ஏற்கவில்லை.. அவர் எவ்வளவோ அட்வைஸ் சொல்லியும் விஜய் கேட்கவில்லை.. எனவே சொந்த காசை போட்டு விஜயை நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படம் ஓடவில்லை.. அதன்பின் சில படங்களை இயக்கினார். பெரிதாக கிளிக் ஆகவில்லை.

எனது மகன் விஜயை படம் எடுங்கள் என பல இயக்குனர்களிடம், தயாரிப்பாளர்களிடம் நேரில் போய் கோரிக்கை வைத்தார் எஸ்.ஏ.சி. ஆனால், யாரும் முன்வரவில்லை. எனது மகனை உங்களின் தம்பியாக நடிக்க வையுங்கள் என்று அப்போதைய ஹீரோக்களாக இருந்த பிரபு, சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன் என பலரிடமும் போய் கேட்டார்.. யாரும் செய்யவில்லை.. இறுதியாக அதை விஜயகாந்த் செய்தார். ஒருகட்டத்தில் விஜய் நிறைய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். விஜய் நடிக்கும் படங்களின் கதை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, விஜயின் சம்பளம் பேசுவது தொடர்பான விஷயங்களை எஸ்.ஏ.சி பார்த்துக்கொண்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். விஜய் தனது அப்பாவை பார்ப்பதை கூட நிறுத்திவிட்டார்.. எனவே எஸ்.ஏ.சி தனது மனைவியுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். எஸ்.ஏ.சி புதிதாக வீடு கட்டிய போது கூட விஜய் அங்கு செல்லவில்லை.. தன் அப்பாவை சந்திப்பதை முழுமையாகவே தவிர்த்தார் விஜய்.. இப்போதும் அப்படித்தான்..

விஜயின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜயை அரசியலுக்கு கொண்டு வந்தது அவரின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர்தான். ஆனால் அதையும் விஜய் மறந்து விட்டார். தனது அரசியலுக்குள்ளும் அப்பா தலையிடாமல் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில்தான் விஜயிடம் பல வருடங்கள் மேனேஜராக பணிபுரிந்த பிடி செல்வகுமார் சமயத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

விஜயும், எஸ்.ஏ.சி-யும் ஏன் பிரிந்தார்கள் என்பதுக்கான உண்மையான காரணம் எனக்கு தெரியாது ஆனால் அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சனை வந்தது.. ‘மகன்தானே.. எதற்காக பிரச்சனை?’ என்று நான் ஒருமுறை கேட்டபோது ‘கோபத்தில் நான் விஜயின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.. நான் அப்பன்தானே.. எனக்கு உரிமை இல்லையா?.. அதன்பின் அவனிடம் மன்னிப்பும் கேட்டேன்.. ஆனால் விஜயின் கோபம் போகவில்லை’ என்று சொன்னார்’ என சொல்லியிருக்கிறார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →