Connect with us
samantha

Cinema News

இதுதான் காரணமா?.. சமந்தா – நாக சைத்தன்யா விவாகரத்தின் பின்னணி…….

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது அதை சமந்தா உறுதி செய்துள்ளார்.

samantha

தனது இன்ஸ்டாகிராமில் ‘நானும், சைத்தன்யாவும் கணவன் மனைவியாகவே பிரிய முடிவெடுத்துள்ளோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அதுதான் எங்கள் உறவின் பலம். அந்த உறவு எப்போதும் எங்களை இணைத்திருக்கும். இந்த கடினமான நேரத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட பிரச்சனையை புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். உங்களின் ஆதரவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நான் இதற்காகத்தான் அவரை திருமணம் செய்தேன்.. ரஜினி பட நடிகை ஓபன் டாக்!

samantha

விவாகாரத்து செய்யவுள்ள நிலையில் தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதையும் சமந்தா பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. சமந்தாவுக்கு ஜீவனாம்சம் கொடுக்க நாக சைத்தன்யாவும், அவரின் குடும்பமும் முன் வந்தது. ஆனால் அதை கூட சமந்தா மறுத்துவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

samantha

இந்நிலையில், சமந்தாவின் விவாகரத்திற்கு நாகை சைத்தன்யாவே காரணம் என்பது தெரியவந்துள்ளது. தெலுங்கில் பாரம்பரியும் உள்ள சினிமா குடும்பத்தில் பிறந்தாலும், நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்றாலும் நாகை சைத்தன்யாவால் பெரிய ஹீரோ ஆக முடியவில்லை. அவரின் தோற்றமும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான முகம் இல்லை. அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளில் நடிக்கவோ, நன்றாக நடனம் ஆடவோ அவருக்கு வராது.

samantha-4

ஆனால், சினிமாவை பொறுத்தவரை சமந்தா அவருக்கு மேலே இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கிறார். கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் ஒரு பெண்ணாகவே அவர் இருக்கிறார். இதனால் நாக சைத்தன்யாவுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை மற்றும் ஈகோ பிரச்சனையே விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். சமந்தா தொடர்ந்து நடிப்பது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து நடிப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் சமந்தா இருந்துள்ளார்.

samantha-2

சமந்தா

எனவே, அவர்களுக்குள் பிரச்சனை இருந்துள்ளது. எனவே, நடிப்பை விட்டுவிடலாம் என்கிற முடிவுக்கும் சமந்தா வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் கூட இதுபற்றி பேசினார். ஒருகட்டத்தில் இது முற்றி இருவரும் பிரிந்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டனர். மற்றபடி நாக சைத்தன்யாவுக்கு வேறு நடிகையுடன் தொடர்பு என்பதில் எல்லாம் உண்மை இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top