சேது திரைப்படம் மூலம் இயக்குனர் இயக்குனராக மாறியவர் இயக்குனர் பாலா. முதல் திரைப்படத்திலேயே யார் இவர்? என அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். பல வருடங்களாக சினிமாவில் போராடி வந்த நடிகர் விக்ரமுக்கும் இப்படம் திருப்புமுனையை கொடுத்தது.
இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா அவராகவே பாலாவிடம் சென்று உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கேட்டு அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. இப்படத்தில் வித்தியாசமான சூர்யாவை ரசிகர்கள் பார்த்தார்கள். தாய் பாசத்துக்காக ஏங்கும் சூர்யா அது கிடைக்காமல் தன்னிடம் பாசம் காட்டும் ராஜ்கிரணிடம் அடைக்கலம் ஆவார். இப்படத்தில் ராஜ்கிரணின் கதாபாத்திரம் அழுத்தமாக அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் பாலா ஆசைப்பட்டார். அவரை சந்தித்து கதையும் சொன்னார். ஆனால், சிவாஜி நடிக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் அப்போதையை அவரின் உடல்நிலைதான்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலோரத்தில் எடுக்கப்படுவதால் கடல் காற்று அப்பாவுக்கு சேராது. அவரின் உடல்நிலை பாதிக்கப்படும் என பாலாவிடம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு சொல்லிவிட்டாரம். அதில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்ட பாலா ராஜ்கிரணை நடிக்க வைத்தாராம்.
இப்படத்தின் இப்படத்தில் ராஜ்கிரண் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈஷாவின் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா!.. விபரங்கள் உள்ளே!..
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…