இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் தான் வலிமை. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ஒரு பாடமாக தல அஜித்தின் வலிமை திரைப்படம் தான் உள்ளது.அதன்படி, வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகிறது.
மேலும், அஜித் படங்களை தவிர்த்து மற்ற படங்களையும் இவர் தயாரித்து வருகிறார். அதில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் ‘வீட்ல விசேஷங்க’ எனும் திரைப்படமும் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள “நெஞ்சுக்கு நீதி” எனும் திரைப்படமும் ரெடியாகி வருகிறது.
பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் தயாரித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அன்று தான் வெளியாகும் என பேசப்படுகிறது.
ஏன்… இந்த பிப்ரவரி 24-ஆம் தேதியில் இவர் தயாரித்த படத்தின் அப்டேட் வெளியாகிறது என கேள்வி எழுப்புகையில் இதில் பெரிய கதை மறைந்திருக்கிறது. பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் இறந்த நாள் அன்று தான்.
இதையும் படியுங்களேன் – தமிழே இங்க தத்தளிக்குது.! இதுல தெலுங்குக்கு போறீங்களா.?! ரசிகர்கள் மரண கலாய்.!
இதனால் தான், போனி கபூர் அஜித்தின் வலிமை ரிலீஸ் செய்கிறார.? ஆனால் இதற்கு முன் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது என்று படக்குழு தெரிவித்தது என ஒரு தரப்பு பேசுகின்றனறர். சரி என்ன நடக்கணு பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில், அஜித்தின் 66-வது திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…