சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த படம் 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
2026 ஜனவரி 13ஆம் தேதி படம் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் வெளியாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை முதலில் புறநானூறு என்கிற தலைப்பில் சூர்யாவை வைத்து எடுக்கும் முயற்சியில் இறங்கினார் சுதா கொங்கரா. சூர்யாவும் நடிக்க ஒப்புக்கொண்டு, அவரின் 2டி நிறுவனமே தயாரிக்க முன்வந்து, படத்தின் பூஜையெல்லாம் நடந்து போஸ்டரும் வெளியானது. ஆனால் கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்ய சொல்லி சுதாகொங்கரா அதற்கு மறுத்ததாகவும் சூர்யா இந்த படத்திலிருந்து வெளியேறினார்.

சூர்யாவுக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அப்படியிருக்க ஹிந்திக்கு எதிரான ஒரு படத்தில் நடித்தால் பாலிவுட்டில் தனக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பதால்தான் சூர்யா இந்த படத்திலிருந்து விலகியதாக அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது.
புறநானூறு துவங்கப்பட்ட போது இந்த படத்தை ஓடிடியில் விற்க முடிவு செய்த சூர்யா நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் பேசியிருக்கிறார். ஆனால் ஹிந்தி மொழிக்கு எதிரான கதையமைப்பை கொண்ட இந்த படத்தை நாங்கள் ஒளிபரப்பினால் வட மாநிலங்களில் நாங்கள் தொழில் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். ஒருபக்கம், இதையே காரணமாக சொல்லி புறநானூறு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையும் விலை போகவில்லையாம். அததனால்தான் கூட்டி கழிச்சு கணக்கு பார்த்த சூர்யா இந்த படத்தையே வேண்டாம் என முடிவு செய்தாராம்.

அவர் அப்போது என்ன நினைத்தாரோ அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. பராசக்தி படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ள நிலையில் இதுவரை டிஜிட்டல் உரிமை விற்கப்படவில்லை. இந்த படத்தின் உரிமையை அமேசான் பிரைம் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியானாலும் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.
எனவே பராசக்தி படம் ஓடிடியில் விலை போகுமா என்பது விரைவில் தெரியவரும்.
