தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் எந்த குடும்பப் பின்னணி இல்லாமல் நுழைந்து மிகவும் கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவர். பல தோல்விப்படங்களை கொடுத்தும் சினிமாவில் இப்போது முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.
அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.. ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அவர் இதுவரை என்ன விளம்பர படங்களிலும் நடித்ததில்லை. ஆனால் மலேசியாவில் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கும் அஜித் கேம்பகோலா குளிர்பான விளம்பரத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதோடு இந்த விளம்பர படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் எனவும் சொல்லப்பட்டது. அதோடு சமீபத்தில் இந்த விளம்பரம் தொடர்பான சில புகைப்படங்களும் வெளியானது. இதற்கு சில சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மக்களின் உடல்நிலையை பாதிக்கும் குளிர்பானம் தொடர்பான விளம்பரத்தில் அஜித் நடிக்கலாமா?’ என்று அவர்கள் சமூகவலை பொங்கி வந்தார்கள்.

ஆனால் இது தொடர்பான ஒரு உண்மை வெளியே தெரிய வந்திருக்கிறது.. அஜித் குளிர்பான விளம்பரத்தில் நடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட Campa Engery என்கிற நிறுவனம் அஜித்தின் கார் ரேஸுக்கு ஸ்பான்சர் செய்கிறது.. எனவே கார் ரேஸ் உடையில் அஜித் அதை புரமோட் செய்கிறார்.
அது தொழில் ரீதியான அணுகுமுறை.. இது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பானது.. அஜித் விளம்பர படங்களில் நடிப்பது என்றால் எப்போதோ நடித்திருப்பார்.. இதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.