23 முறை விஜயுடன் மோதிய சூர்யா இப்போது பணிந்தது ஏன்?!.. கங்குவாவை காப்பாத்தணுமே!..

Published on: August 16, 2024
suriya
---Advertisement---

Ganguva: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிவில் நுழைந்தவர் சூர்யா. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பின் படிப்படியாக வளர்ந்து இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில்தான், விஜயின் கோட் படம் வெளியாகும் திரையரங்குகளில் கங்குவா படத்தின் டிரெய்லர் வீடியோவை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு முன் சூர்யா – விஜயின் படங்கள் 23 முறை தியேட்டரில் மோதியிருக்கிறது. என்னதான் நண்பன் என்றாலும் விஜயை தனது திரையுலக போட்டியாளராகவே சூர்யா பார்த்தார்.

suriya

‘விஜய் மாதிரி நம்மால் நடனமாட முடியவில்லையே’ என்கிற ஆதங்கம் இப்போதும் சூர்யாவுக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது கங்குவா படத்தின் விளம்பரத்திற்கு விஜயை அவர் நம்பியதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. விஜயும், சூர்யாவும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். ‘வாடா போடா’ என பேசிக்கொள்ளும் நண்பர்கள்.

ஆனால், இருவருக்கும் இடையே நெருங்கி நட்பு கிடையாது. நேருக்கு நேர் படத்தில் நடிக்கும்போது சூர்யாவுக்கு கேமராவை எப்படி எதிர்கொள்வது என சொல்லிக்கொடுத்தவர் விஜய். சூர்யாவின் ஏழாம் அறிவு படமும், விஜயின் வேலாயுதம் படமும் ஒரு தீபாவளிக்கு மோதியது. அப்போது விஜய் – சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது.

இப்போது கங்குவா திரைப்படம் 250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களாக சூர்யாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, கங்குவா படத்தை எப்படியாவது ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்து ஒரு வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்கிற ஆசை சூர்யாவுக்கு இருக்கிறது.

அதனால்தான், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மூலம் கோட் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு அது ஏற்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், விஜயும் விரைவில் அரசியலுக்கு போகவிருப்பதால சூர்யாவும் தனது ஈகோவை விட்டுருப்பார் என சொல்கிறார்கள்.

வெற்றி முக்கியம் பிகிலு!…

இதையும் படிங்க: சான்ஸே இல்ல… அந்த விஷயத்துல விக்ரம் மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாதாம்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.