Connect with us

இப்போதைக்கு கருப்பு ரிலீஸாகாது போலயே!.. ஐயோ பாவம் சூர்யா!

latest news

இப்போதைக்கு கருப்பு ரிலீஸாகாது போலயே!.. ஐயோ பாவம் சூர்யா!

நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக போராடி வருகிறார்.. சிங்கம் 2-வுக்கு பின் அப்படி ஒரு படம் அவருக்கு அமையவில்லை.. அவர் பெரும் உழைப்பை கொட்டி நடித்த கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக் வில்லை.

அதேநேரம் அடுத்த வெளியான ரெட்ரோ திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்தில் வழக்கறிஞராகவும், கருப்பண்ண சாமியாகவும் நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு பக்கா கமர்சியல் மசாலா திரைப்படமாக உருவாகியிருக்கிறது. ஆனால் பல காரணங்களால் இந்த படம் உருவானபோது பல சிக்கல்கள் ஏற்பட்டது. எனவே, இந்த படத்தை முடிக்காமலேயே அடுத்த படத்தில் நடிக்கப்போனார் சூர்யா.

ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழியாக ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டார். ஆனால் இதுவரை இந்த படம் எப்போது ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்..

கருப்பு படத்தின் ஓடிடி உரிமையை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கவில்லை. அதனால்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை என முதலில் சொன்னார்கள். தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மொத்தமாக 200 கோடிக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருதுகிறாராம்.

குறிப்பாக ஓடிடி உரிமைக்கு 75 கோடி விலை சொல்கிறாராம். ஆனால் அது முடியவில்லை.. தற்போது இறங்கி வந்து 65 கோடி என்று பேசி வருகிறாராம்.. இந்த பேரம் முடிந்தால் மட்டுமே கருப்பு திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்கிற செய்தி வெளியாகும்.. அனேகமாக ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் வெளியாகலாம் என்கிறார்கள்..

To Top