கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட அட்லியை தேடி போனார்கள். ஷங்கர் கூட இந்தியன் 2 படத்தில் அனிருத்தை இசையமைக்க வைத்தார். ஏனெனில், அனிருத் இசையமைத்தால் பாடல்கள் ஹிட் என்கிற நிலையை அவர் உருவாக்கியிருந்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கூட அனிருத் இசையமைக்க தொடங்கினார். அதோடு அவர் உருவாக்கும் பாடல்கள் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெறுகிறது. எனவேதான், பெரும்பாலான இயக்குனர்கள் அனிருத் பக்கமே செல்கிறார்கள்..
ஆனால் கடந்த ஒரு வருடமாகவே பலரும் சாய் அபயங்கர் பக்கம் செல்கிறார்கள்.. சாய் அபயங்கர் அனிருத்திடம் வேலை பார்த்தவர். அவரின் 2 ஆல்படம் பாடல்கள் இளசுகளிடம் சூப்பர் ஹிட். அதனால், அவரின் இசையில் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் 7 புதிய படங்களில் இசையமைக்க சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
‘இது எப்படி சாத்தியம்?’ என்று பலரும் யோசிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ஒரு புதிய படத்துக்கு இசையமைக்க அனிருத்தை தொடர்பு கொண்டால் அவர் போனையே எடுப்பதில்லையாம். அவர் தனது நண்பரையே மேனேஜராக நியமித்துள்ளார். அவரும் போனை எடுப்பதில்லை என சொல்லப்படுகிறது.. அப்படியே அவர் போனை எடுத்தாலும் சரியாக ரெஸ்பான்ஸ் செய்வதில்லையாம்.. இதையடுத்தே பலரும் சாய் அபயங்கர் பக்கம் செல்வதாக சொல்லப்படுகிறது..
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…