கூலி படத்திற்கு பின் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற சனிக்கிழமையோடு முடிவடைவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினியின் 173-வது திரைப்படமாகும். இந்த படத்தை ரஜினியின் நண்பர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் முதல் வாரம் துவங்கவுள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில்தான் சிபிச் சக்ரவர்த்தி படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான புரமோ வீடியோவை வருகிற பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் மரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜுவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்கிற தகவலும் வெளியானது.
ரஜினி எப்படியும் சிபிச் சக்கரவர்த்தி படத்தை முடித்துவிட்டுதான் கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறார்.. கண்டிப்பாக அதற்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது எதற்காக இவ்வளவு அவசரமாக புரமோ வீடியோவை எடுக்கிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.. இந்நிலையில்தான் அதன் பின்னணி தெரியவந்திருக்கிறது.
இதற்கு பின்னணியில் ஓடிடி வியாபாரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. புரமோ வீடியோ எடுத்துக் காட்டி, எப்போது படம் ரிலீஸ் என்பதை அட்வான்ஸாக சொன்னால் மட்டுமே ஓடிடியில் படத்தை புக் பண்ண முடியும் என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. அதனால்தான் புரமோ வீடியோவை இவ்வளவு வேகமாக எடுக்கிறார்கள் என்கிறார்கள்.




