பீஸ்ட் வசூலை வச்சி தப்புக்கணக்கு போட்ட தாணு...‘நானே வருவேன்’ இப்படி ஆகிப்போச்சே!...

மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் இப்படம் ரூ.26.5 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

pon2_cine

அதேபோல், இப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது கடந்த 29ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவான ‘நானே வருவேன்’ திரைப்படமும் வெளியானது. பல வருடங்களுக்கு பின் செல்வராகவனும் தனுஷும் இணைந்ததால் இப்படத்தின் மீதும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. எனவே, முதல் நாள் தமிழகத்தில் இப்படம் ரூ.10 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அடுத்தநாள் பொன்னியின் செல்வன் வெளியானதாலும், நானே வருவேன் படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என விமர்சனம் எழுந்ததாலும் அப்படத்தின் வசூல் அடி வாங்கியது. தற்போது பல திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டது.

இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். பொன்னியின் செல்வன் என ஒரு பெரிய படம் வெளியாகும் போது நானே வருவேன் படத்தை அவர் ஏன் ரிலீஸ் செய்ய வேண்டும் என பலரும் கருதினர். தாணு துணிந்து இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பீஸ்ட் படம் வெளியான போது, கன்னட படமான கேஜிஎப் 2 திரைப்படமும் வெளியானது. ஆனால்,பீஸ்டை விட அப்படம் வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது. எனவே, அப்படி ஏதேனும் என நடக்கும் என கணக்கு போட்டுத்தான் தாணு தைரியமாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்தார் எனக்கூறப்படுகிறது. ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என ஆகிவிட்டது.

 

Related Articles

Next Story