நடிகை விஷயத்தில் கமல் செய்த தவறு!.. விக்ரம் படம் பிளாப் ஆனதுக்கு காரணமே அதுதான்!...
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்பது இயக்குனரின் கையில் இல்லை. ஆனால், முற்றிலும் ரசிகர்களுக்கு பிடித்தது போல், அவர்கள் ஏற்றுகொள்வது போல் எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஒரு திரைப்படம் வெற்றியை பெறும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற எல்லா படங்களையும் அதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அதேநேரம், ஒரு சில காட்சிகள் கூட ஒரு முழுப்படம் தோற்றுப்போவதற்கு காரணமாக அமைந்துவிடும். ஏனெனில், அந்த காட்சிகள் பிடிக்காமல் போயிருக்கும்.
கமலும், மறைந்த எழுத்தாளர் சுஜாதாவும் இணைந்து உருவாக்கிய கதைதான் விக்ரம். 1986ம் வருடம் இப்படம் வெளியானது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரித்தது. இப்படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார். இப்படத்தில் அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா என 3 நடிகைகள் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட அப்போது ஹாலிவுட்டில் கலக்கி வந்த ஜேம்ஸ்பாண்ட பட பாணியில் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கி இருந்தார் கமல். அதனால்தான் 3 கதாநாயகிகளை இப்படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் வில்லனாக சத்தியராஜ் நடித்திருந்தார்.
மேலும், ஹிந்தி நடிகர் அம்ஜத் கான், மனோரமா, ஜனகராஜ் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட். அதிலும், வனிதா மணி, என் ஜோடி மஞ்சக்குருவி, மீண்டும் மீண்டும் வா போன்ற பாடல்கள் இப்போதும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.
இந்த படத்தின் துவக்கத்தில் கமலுடன் அம்பிகா டூயட் பாடுவார். பாடல் முடியும் போது அவர் சுட்டு கொல்லப்படுவார். அம்பிகா இறந்து போனது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதுவே விக்ரம் படத்திற்கு எதிராக அமைந்துவிட்டது. அதனால்தான் விக்ரம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
கமல் பல வருடங்களுக்கு பின் மீண்டும் நடித்த விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹி அடித்து நல்ல வசூலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.