அந்த அம்மா சொன்ன வார்த்தை!.. அதோடு விட்டுட்டேன்!.. யோகிபாபு சொன்ன பிளாஷ்பேக்!..

by சிவா |   ( Updated:2024-05-05 11:35:57  )
yogibabu
X

சினிமாவில் சிலரின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கும். அப்படி இருக்கிறது யோகிபாபுவின் கேரியர். அதற்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் இப்போது சொல்லிக்கொள்ளும்படி காமெடியன்கள் யாரும் இல்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு எல்லோரும் கிட்டத்தட்ட ரிட்டயர்ட் ஆகிவிட்டனர். மீண்டும் அவர்களால் பழைய மாதிரி நடிக்க முடியாது.

சந்தானமும், சூரியும் ஹீரோவாக நடிக்க போய்விட்டார்கள். எனவே, அந்த இடத்தை சரியாக பிடித்துக்கொண்டார் யோகி பாபு. இது அவரின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவர் நடிப்பது சிரிப்பு வருகிறதோ இல்லையோ.. காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் தயாரிப்பாளர்களை அவரை புக் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

எனவே, கையில் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார் யோகிபாபு. கால்ஷீட் இல்லை என சொல்லி பல படங்களில் அவரால் நடிக்க முடியாமலும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான விஷாலின் ரத்னம், நேற்று வெளியான அரண்மனை 4 என எல்லா படத்திலும் அவர் இருக்கிறார்.

யோகிபாபு துவக்க வாழ்க்கை இப்படி இல்லை. லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக மூலையில் நின்று கொண்டிருப்பார். சினிமா வாய்ப்பு தேடி பல கம்பெனிகள் ஏறி இறங்கினார். பல இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டார். கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைத்து முன்னேறினார். வடிவேல் சில வருடங்கள் நடிக்கவில்லை. எனவே, யோகிபாபுவுக்கு அடித்தது யோகம்.

இதையும் படிங்க: இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா…

காமெடியனாக மட்டுமில்லாமல் மண்டேலா போல பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். நல்லவேளையாக அவருக்கும் ஒரு கதாநாயகி, அவருக்கும் டூயட் என தமிழ் சினிமா இன்னும் செல்லவில்லை. அப்படியும் கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு ஒரு பாடலும் இருந்தது. அதுதான் அவரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது.

நல்லவேளை அவர் இன்னும் நடனம் மட்டும் ஆடவில்லை. இது தொடர்பாக ஒரு மேடையில் பேசிய யோகிபாபு ‘ஒரு படத்தில் பாடல் காட்சியில் நான் நடனமாடினேன். காட்சிகளை இரவு நேரத்தில் எடுத்தார்கள். என்னால் சரியாக ஆடமுடியவில்லை. எனவே, எனக்கு பின்னால் ஆடிய ஒரு அம்மா ‘எனக்கு மார்பே வலிக்குது. இவன் சரியா ஆடி தொலைக்க மாட்டேங்குறான்’ என புலம்பினார். அதோடு சரி. இனிமேல் நாம் யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என முடிவு செய்து நான் நடிக்கும் படங்களில் நடனமாடுவதை தவிர்த்து விடுகிறேன்’ என சொல்லி இருந்தார்.

Next Story