பூஜா ஹெக்டேவுக்கு தளபதி 66 படவாய்ப்பு கிடைக்காமல் போக இதுதான் காரணமாம்!

by alagesan |   ( Updated:2022-04-13 02:35:41  )
pooja hegde dp
X

pooja hegde dp

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பை லிங்குவல் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

vijay 66

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் இந்த படத்தில் நாயகிக்கான முதல் தேர்வு ராஷ்மிகா கிடையாதாம். ஆமாங்க முதல்ல இந்த படத்துல நாயகியா பூஜா ஹெக்டேவ தான் நடிக்க வைக்க இருந்தாங்களாம்.

vijay 66

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதாவது, "பூஜா திறமையான நடிகை. அதனால தான் அவரை தளபதி 66 படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் ஏற்கனவே அவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்து விட்டதால், அடுத்தடுத்து நடித்தால் நன்றாக இருக்காது என்பதால் எங்கள் முடிவை மாற்றி விட்டோம்" என கூறியுள்ளார்.

pooja hedge

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இனி தமிழ் சினிமா நமக்கு செட்டாகாது என நினைத்த பூஜா தெலுங்கு சினிமா பக்கம் தாவினார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு ரசிகர்கள் பூஜாவை கொண்டாடினார்கள். தற்போது பூஜா அங்கு டாப் நடிகையாக உள்ளார்.

விஜய் முதல் முறையாக தெலுங்கு படத்தில் நடிப்பதால் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்ய நினைத்த படக்குழுவினர் பூஜாவை முடிவு செய்தனர். ஆனால் சில காரணங்களால் தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராஷ்மிகா தான் தளபதி 66 படத்தின் நாயகி என அறிவிப்பு வெளியான சமயத்தில் அவரை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story