பிரசாந்த் கோட்ல நடிச்சதுக்கு இதுதான் காரணம்... இப்பவாவது சொன்னங்களே!...

by sankaran v |   ( Updated:2024-09-07 14:57:13  )
goat prashanth
X

goat prashanth

கோட் படத்துல பிரசாந்த் நடிச்சதுக்கு இது தான் காரணம் என அவரது தந்தை தியாகராஜன் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

பிரசாந்த்தும், விஜயும் நல்ல நண்பர்கள். விஜயை ரொம்ப பிடிக்கும். வெங்கட்பிரபு வந்து ஒரு கதையை சொல்லி அதுல முக்கியத்துவம் கொடுத்து விஜயோடு நடிக்கணும்னு படத்துல நடிக்க வாய்ப்பு கொடுக்கும் போது அவர் யோசிக்கவே இல்லை. கதையைக் கேட்டாரு. அவருக்குப் பிடிச்சிருந்தது.

jeans

jeans

எங்கிட்ட கேட்டாரு. சொன்ன மாதிரி எடுப்பேன்னு டைரக்டர் சொன்னாரு. அதனால நான் பண்றேன்னாரு. தாராளமா பண்ணுன்னு சொன்னேன். ஏன்னா எல்லா கதையையும் கேட்குறது பிரசாந்த் தான். செல்வராகவனோட முதல் படம் பிரசாந்த்கிட்ட தான் கேட்டாங்க. அப்போ அதைக் கேட்டதும் இது ஸ்கூல் பையன் கதையா இருக்குன்னு மறுத்துட்டாரு. அது தான் துள்ளுவதோ இளமை. அப்புறம் தனுஷை வச்சிப் பண்ணினாரு.

இதை மாதிரி அவரு தான் கதை கேட்பாரு. எல்லாரும் நான் தான் வேணாம்னு சொல்றேன்னு சொல்வாங்க. அது தப்பு. பார்த்தேன் ரசித்தேன் படத்தோட கதையை ஹரி சொல்லும்போது கேட்டாரு. டேடு கதை நல்லாருக்கு. பண்றேன்னாரு.

Also read: விஜயின் மாஸ் என்னன்னு ‘கோட்’ படம் காட்டிருச்சி!.. இவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும்..

அப்படித் தான் ஹரியை அறிமுகப்படுத்துனாரு. ஜீன்ஸ் மாதிரி ஒரு படம் வந்தபிறகு எந்த நடிகராவது புது டைரக்டர் படத்துல போய் நடிப்பாரா? கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் படம். அதை பண்றதுக்கு ஒரு நடிகருக்கு தனியா துணிச்சல் வேணும். அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.

தான் வாழ்க்கை. இப்படித்தான் சம்பாதிக்கணும்னு இருந்ததுன்னா போட்டிப் போட்டு அன்னைக்கு இருந்த டைரக்டர்களோடு சேர்ந்து படம் நடிச்சிருப்பாரு. ஆனா அந்த எண்ணம் கிடையாது. அவருக்கிட்ட யாராவது அப்ரோச் பண்ணினாங்கன்னா பொறுமையா கேட்பாரு. பிடிச்சிருந்தா நடிச்சிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story