செல்வராகவன் - சந்தானம் படத்தில் என்ன பிரச்சனை தெரியுமா? படம் பாதியில் நின்றதற்கான உண்மையான காரணம் இதுதான்!!

by prabhanjani |
santhanam
X

சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகு ஒரே மாதிரியான படங்களில் நடித்து வருகிறார் என்று பலர் கூறிவந்தனர். அந்த சமயத்தில் தான் ஒரு தரமான அறிவிப்பு வெளியானது. நடிகர் சந்தானம், செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2016ம் வருடம் வெளியானது.

mannavan

சந்தானம் ரசிகர்களும், செல்வராகவன் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலாக காத்திருந்தனர். இந்த படத்திற்கு மன்னவன் வந்தானடி என பெயரிடப்பட்டது. இந்த படத்தில் அதிதி போகன்கர் கதாநாயகியான நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன் என்ஜிகே படத்திற்கு முன்பே இந்த படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

சுஷாந்த் பிரசாத், சித்தார்த் ராவ், செல்வராகவன், கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். பைனான்ஸ் பிரச்சனையால் இந்த படம் பாதியில் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 'மன்னவன் வந்தானடி' உரிமையை விற்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

santa selvaraghavan

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் ஏதோ பல காரணங்களால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. இந்த படம் வெளியாகுமா?, ஆகாதா? படத்தில் என்ன சிக்கல் உள்ளிட்டவற்றை சந்தானம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மன்னவன் வந்தானடி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80% முடிவடைந்துவிட்டது.

ஆனால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வேண்டும், விரைவில் அந்த படத்தை வெளியிட வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்கு தயாரிப்பாளர் மனசு வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சந்தானம். இந்த படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும் உறுதியளித்துள்ளார். செல்வராகவனுடன் பணியாற்றியது மிக சிறப்பான அனுபவம் என்றும் சந்தானம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பரத்தின் 50வது படம்னு போய் பார்த்தா.. அறுவை படமால்ல இருக்கு!.. லவ் விமர்சனம் இதோ!..

Next Story