கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனு இரு!.. விஜய்க்கிட்ட கத்துக்கலயா திரிஷா!. கோபத்தின் பின்னணி என்ன?!…

Trisha: சினிமா பிரபலங்கள் விமர்சனத்தை சந்திக்காமல் செல்லவே முடியாது. அதேநேரம், விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவும் முடியாது. சினிமா பிரபலங்கள்தான் மிகவும் சுலபமாக விமர்சனங்களில் சிக்குவார்கள். அதிலும், இப்போதெல்லாம் Toxic என சொல்லப்படும் வன்மம் பலரிடமும் இருக்கிறது. தங்களுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளையும், வன்மத்தையும் மொத்தமாக சமூகவலைத்தளங்களில்தான் பலரும் கொட்டுகிறார்கள்.
இதனால்தான் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் வன்மத்தை கொடுக்கும் குப்பை தொட்டிகளாக மாறி நாற்றமடிக்க துவங்கிவிட்டது. விஜய் ரசிகர்கள் அஜித் மற்றும் ரஜினி மீது வன்மத்தை கக்குவதும், அஜித் ரசிகர் விஜயின் மீது வன்மத்தை கக்குவதும் என இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வன்மத்தை காட்டாதீர்கள். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என அஜித்தும் அறிவுரை செய்தார். ஆனால், அவரின் ரசிகர்கள் திருந்தவில்லை.
இந்நிலையில்தான், நடிகை திரிஷா திடீரென நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபமான பதிவை போட்டியிருந்தார். ஸ்ப்பா.. வன்மத்தை கொட்டுபவர்களே. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்?. நன்றாக தூங்குகிறீர்களா?.. சமூகவலைத்தளங்களில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றி அறிவில்லாத விஷயங்களை பேசுவதில் மட்டுமே உங்கள் நாட்கள் ஓடிவிடுகிறதா?.. உங்களுக்காகவும், உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களுக்காகவும் வருத்தப்படுகிறேன். முகத்தை காட்டாத கோழைகள்.. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ என பதிவிட்டிருந்தார்.

கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிகமான காட்சிகளோ முக்கியத்துவமோ இல்லை. இன்னும் அவரை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம் என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். குறிப்பாக ரசிகர்கள் பலரும் வேண்டுமென்றே வன்மத்தை கொட்டியிருந்தார்கள்.

இதுதான் திரிஷாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. யோசித்தால் இது போன்ற விஷயங்களையெல்லாம் திரிஷா கண்டுகொள்ளாமல் கடந்து போயிருக்கலாம். இவ்வளவு கோபப்பட தேவையில்லை. அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் அவர் இருப்பது நல்லது.
அதோடு, விஜயின் தோழியாக இருந்துகொண்டு அவர் சொன்ன ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்க ஜம்முன்னு இருக்கும்’ என்ற பன்ச் வசனத்தை திரிஷாவும் பின்பற்றினால் நல்லது என்பதே எல்லோரின் விருப்பாமாகவும் இருக்கிறது.