நயனின் கோபத்திற்கு நடிகைகள் லைக் போட்டதின் பின்னணி!.. ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திருக்காங்க!..

nayan
Nayanthara: தனுஷ் மீது கோபம் காட்டி நயன்தாரா வெளியிட்ட அறிக்கை நேற்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சமூகவலைத்தளங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஊடகங்கள் எல்லாமுமே இது தொடர்பான செய்திகளை வெளியிட்டது. நாட்டில் வேறு பிரச்சனை இல்லாதது போல இதைப்பற்றியே எல்லோரும் பேசினார்கள்.
தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின்போது நயனுடன் ரொமான்ஸ் செய்து அவரின் மனதில் இடம் பிடித்தார் விக்னேஷ் சிவன். அந்த படத்தின் நிஜ ஹீரோ விஜய் சேதுபதி இல்லை. விக்னேஷ் சிவன்தான். தங்கமே.. செல்லமே என விஜய் சேதுபதி ரூபத்தில் உருகியது விக்கிதான்.
இதையும் படிங்க: ஒவ்வொருத்தரா லைன்ல வாங்கப்பா!… போட்டி போடும் இயக்குனர்கள்?!… குழப்பத்தில் சூப்பர் ஸ்டார்!…
அதோடு, சொன்ன பட்ஜெட்டை விட் சில கோடி தாண்டி போனதால் கடுப்பான தனுஷ் இதற்கு மேல் நான் பணம் தரமாட்டேன் என சொல்ல நயன் சில கோடிகளை கொடுத்து படம் முடிக்கப்பட்டது. படம் ஹிட் ஆனாலும் தனுஷுக்கு லாபம் ஒன்றுமில்லை. எனவே, நயன், விக்கி ஆகியோருடனான நட்பை துண்டித்துக்கொண்டார் தனுஷ்.
நயனின் திருமண வீடியோ தொடர்பான குறும்படத்திற்கு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் தேவைப்பட தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை. இதுதான் நயனின் கோபத்திற்கு காரணம். நியாயமாக பார்த்தால் தனுஷிடம் நட்பாக கேட்டு அதை வாங்கி இருக்கலாம். அல்லது வியாபாரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கி இருக்கலாம். நயன் - விக்கி தரப்பு இந்த இரண்டையுமே செய்யவில்லை.
தனுஷ் என்.ஓ.சி கொடுக்க முடியாது என சொல்லவே சமூகவலைத்தளத்தில் கொட்டி தீர்த்துவிட்டனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில், இன்ஸ்டாகிராமில் நயன் போட்ட பதிவுக்கு மலையாள நடிகைகள் பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் லைக் போட்டிருந்தார்கள். அவர்கள் எல்லாமே தனுஷுடன் நடித்தவர்கள்தான்.
இதையும் படிங்க: ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…
இந்நிலையில், நயன்தாரா தரப்பு அவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டதால்தான் அவர்கள் இன்ஸ்டாகிராமில் லைக் போட்டதாக சொல்லப்படுகிறது. மலையாள நடிகர்களின் முகத்திரையை கிழித்த ஹேமா கமிஷன் விவகாரம் சூடுபிடித்தபோது நயன்தாரா வாயை மூடிக்கொண்டிருந்தார். மலையாள நடிகைகளுக்கு ஆதரவாக ஒன்றுமே அவர் பேசவில்லை. ஆனால், அவருக்கு எல்லா நடிகைகளும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

#image_title
இதில், ஆச்சர்யம் என்னவெனில் பார்வதி போன்ற அறிவுசார்ந்த பெண் கூட விஷயம் என்னவென புரியாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து நயனின் வலைக்குள் வீழ்ந்திருக்கிறார். நயன் ஒன்றும் சமூக நோக்கத்திற்காக அந்த குறும்படத்தை வெளியிடவில்லை. 27 கோடி விலை பேசியிருக்கிறார். தனுஷால் அதில் சிக்கல் வரும் என்பதால்தான் கோபத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதே உண்மை.