நயன்தாராவால் ஆப்பு வைத்துக்கொண்ட விக்னேஷ் சிவன்!.. அஜித் கடுப்பாக காரணம் அதுதானாம்!..

by சிவா |
vignesh sivan
X

திரையுலகில் தற்போது ஓடிக்கொண்டிருப்பது அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்ட விஷயம்தான். இதுவரை அஜித்தின் கேரியரில் இப்படி ஒரு விஷயம் நடந்தது இல்லை. இவர்தான் இயக்குனர் என அவர் முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து மாறமாட்டார். அதேபோல், அந்த படம் தோல்வி அடைந்தாலும், தன்னை விட்டு போகும் போது அந்த இயக்குனர் வெற்றிப்பட இயக்குனராகத்தான் போக வேண்டும் என நினைத்து அடுத்த பட வாய்ப்பையும் அவருக்கே கொடுப்பார்.

விவேகம் பட தோல்விக்கு பின் மீண்டும் சிவாவுடன் இணைந்து விஸ்வாசம் பட வெற்றியை கொடுத்தவர் அஜித். அதுதான் அவரின் குணம். ஆனால், அதே அஜித் விக்னேஷ் சிவனை வேண்டாம் என கூறினார் எனில் அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. அதாவது, விக்னேஷ் சிவன் செய்த சில விஷயங்கள் அஜித்திற்கு கோபத்தை ஏற்படுத்தியதுதான் அதற்கு காரணம்.

ajith

ajith

பொதுவாக அஜித் இயக்குனரிடம் முழுக்கதையை கேட்க மாட்டார். சில காட்சிகளை மட்டுமே கேட்பார். இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையில் மட்டுமே படம் நடிப்பார். ஆனால், என்ன நினைத்தாரோ விக்னேஷ் சிவனிடம் முழுக்கதையும் கேட்டுள்ளார் அஜித். ஆனால், அதில் அவருக்கு திருப்தி இல்லை. எனவே, வேறு கதையை பண்ண சொல்லியிருக்கிறார். ஆனால், லண்டன் சென்று லைக்கா நிறுவனத்திடம் இதே கதையை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். இதில், அஜித் கடுப்பாகியுள்ளார். மேலும், விக்கி சொன்ன கதை லைக்காவுக்கும் பிடிக்கவில்லை.

அதேபோல், இப்படத்தில் நயன்தாரா வேண்டாம் என துவக்கம் முதலே சொல்லி வந்துள்ளார் அஜித். எனவே, வேறு சில நாயகிகளிடம் பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால், அவர் மனதில் நயன்தாரா மட்டுமே இருந்துள்ளார். அஜித்திடம் கொடுக்கப்பட்ட லிஸ்ட்டில் நயன்தாரா பேர் இருக்கவே கடுப்பான அஜித் விக்னேஷ் சிவன் வேண்டாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் சொதப்பலான கதை மற்றும் நயன்தாராதான் கதாநாயகி என்கிற பிடிவாதம் ஆகியவற்றால்தான் விக்னேஷ் சிவன் அஜித் பட வாய்ப்பை இழந்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் போனா போகட்டும்..நான் இருக்கேன்!.. விக்னேஷ் சிவனுக்கு கை கொடுக்கும் பெரிய நடிகர்..

Next Story