தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம்?- பரவும் தகவல்கள்

Published on: January 18, 2022
danush
---Advertisement---

18 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த நடிகை தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக நேற்று திடீரென அறிவித்தனர். இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஏற்கனவே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தோளுக்கு மேல் மகன் இருக்கும் நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி ரசிகர்கள் முதல் திரையுலகினர் என பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது.

பொதுவாகவே தனுஷ் தொடர்பான கிசுகிசுக்கள் என்பது தமிழ் சினிமாவில் அதிகம். சில நடிகைகளோடு அவரை ஒப்பிட்டு பல வருடங்களாகவே பேசி வருகிறார்கள். இது தொடர்பாக ஐஸ்வர்யாவுக்கும், அவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரு நடிகையிடம் ஐஸ்வர்யாவே போன் போட்டு கோபமாக விசாரிக்க, அவர் தனுஷிடம் அதை கூற தற்போது விவகாரத்து வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

danush

7 வருடங்களுக்கு முன்பும் இதே போல் பிரச்சனை எழுந்தது. அப்போது, பெரியவர்கள் பேசி இருவருக்கும் இடையே சமாதானம் செய்தனர். ஆனால், தற்போது சமாதானம் எடுபடவில்லை. சில மாதங்களாகவே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லையாம்.

danush

டிசம்பர் மாதம் ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடிய போது கூட அந்த புகைப்படத்தில் தனுஷ் இல்லை. கடந்த 2 வாரங்களாகவே தனுஷ் வெளியூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் பிரிவது என்பது 2 வாரங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment