Connect with us
vijayakanth

Cinema History

சாப்பிட கூட விடாமல் விஜயகாந்தை தடுத்த இயக்குனர்!.. அதுக்கு பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்!..

மறைந்த நடிகர் விஜயகாந்த் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் ஒரு தகவலை சொன்னார். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்த படத்தின் கதாநாயகி அப்போது பிரபலமாக இருந்தவர். காலையில் இருந்து படப்பிடிப்பு நடக்கவிலலி. மதியம் பசியில் இருந்த நான் அப்போதுதான் சாப்பிட அமர்ந்தேன்.

உடனே உதவி இயக்குனர் ஒருவர் ஓடி வந்து ‘மேடம் வந்துட்டாங்க.. உன்னை இயக்குனர் கூப்பிடுகிறார்’ என சொல்லி கையோடு என்னை அழைத்து போனார். பசியில் இருந்தாலும் வாய்ப்பு என்பதால் காட்சிகளில் நடித்தேன். இப்படியெல்லாம் சினிமாவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. அதனால்தான் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என முடிவெடுத்தேன்’ என சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: தங்கச்சின்னு கூப்பிட்ட பொண்ணு கூட ஜோடியா?.. நடிக்க மறுத்த விஜயகாந்த்.. அட அவரா!..

ஆனால், விஜயகாந்த் நினைத்தது போல் அன்று நடக்கவில்லை. இயக்குனர் அப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்பதை இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் அகல் விளக்கு. பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இயக்கினார்.

al vilakku

விஜயகாந்த் அப்போது வளர்ந்துவரும் நடிகராக இருந்தார். அவரை அந்த படத்தில் நடிக்க வைக்க அப்படத்தின் தயாரிப்பாளருக்கு விருப்பமில்லை. ஒருதலை ராகம் படத்தில் நடித்த ரவீந்தரனை கதாநாயகனாக போட்டு படத்தை எடுக்க நினைத்தார். ஆனால், விஜயகாந்துதான் ஹீரோ என்பதில் இயக்குனர் செல்வராஜ் தீவிரமாக இருந்தார். இந்த படத்தின் கதாநாயகியாக ஷோபா நடித்திருந்தார்.

இதையும் படிங்க: நான்தான் அதுல பெஸ்ட்டுன்னு நினைச்சேன்!. ஆனா விஜயகாந்த் அசத்திட்டாரு!.. ராதா என்ன சொல்றார் பாருங்க!…

அப்படி படப்பிடிப்பு துவங்கி நடந்துகொண்டிருந்தபோது காலையில் வரவேண்டிய ஷோபா வரவில்லை. மதிய உணவு இடைவேளையின் போதுதான் வந்தார். உடனே இயக்குனரிடம் தயாரிப்பாளர் ‘ஷோபாவை வைத்து சில காட்சிகளை எடுத்துவிடு’ என சொன்னார். ஷோபாவை தனியாக வைத்து காட்சிகளை எடுத்துவிட்டால் கண்டிப்பாக விஜயகாந்தை தூக்கிவிட்டு ரவீந்தரனை வைத்து எடுக்குமாறு தயாரிப்பாளர் அழுத்தம் கொடுப்பார் என்பதால் அதை தவிர்ப்பதற்காகவே விஜயகாந்தை உடனே அழைத்து வருமாறு உதவி இயக்குனரிடம் சொன்னார் இயக்குனர்.

இது விஜயகாந்துக்கு அவர் செய்த நன்மைதான். ஆனால், இதுவேறுமாதிரி டிவிஸ்ட் ஆகிவிட்டது. அப்போது விஜயகாந்துக்கே இது புரியவில்லை. இப்படித்தான் திரையுலகில் பல உண்மைகள் உறங்கி கிடக்கிறது’ என சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அஜித்தை சீண்டவே முடியாது.. விஜயகாந்த் பார்த்து ரசித்த ஆளு அஜித்! பிரபலம் சொன்ன புது தகவல்

google news
Continue Reading

More in Cinema History

To Top