வாலிக்கு அந்த பெயரை வச்சது யார் தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்....

by சிவா |   ( Updated:2023-03-21 06:08:01  )
vaali
X

vaali

தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு நிகராக வளர்ந்த ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். தன்னையும், தன் தமிழையும் மட்டுமே நம்பி சினிமாவில் வளர்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பல பாடல்களை வாலி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் படங்களில் அவரை புரமோட் செய்வது போல ஒரு பாடல் கண்டிப்பாக இருக்கும். அது எல்லாமே வாலி எழுதியதுதான்.

மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், ஏன் என்ற கேள்வி உள்ளிட்ட பாடல்கள் அவர் எழுதியதுதான். அதேபோல், எம்.ஜி.ஆர் படங்களில் பல காதல் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்கள் கண்ணதாசன் எழுதியது என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான பாடலாசிரியராகவும் வாலி இருந்தார்.

Vaali

Vaali

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் மட்டுமில்லாமல் ரஜினி,கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட பல நடிகர்களுக்கும் அவர் பாடல்களை எழுதி அசத்தியுள்ளார். அதனால்தான் வாலிப கவிஞர் வாலி என்கிற பட்டம் அவருக்கு கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் காலம் துவங்கி இளையாராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியவர்.

இவருக்கு வாலி என்கிற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. வாலியின் நிஜப்பெயர் சீனிவாசன் ரங்கராஜன். பள்ளியில் படிக்கும் போது ஓவியத்தின் மீது ஆர்வம் வந்து நிறைய வரைந்துள்ளார். பிரபலமான அரசியல் தலைவர்கள் மற்றும் சங்கீத வித்வான்கள் என யார் வந்தாலும் அவர்களை வரைந்து அந்த ஓவியத்தை அவர்களிடம் கொடுப்பாராம். அப்போது ஆனந்த விகடனில் மாலி என்கிற பெரிய ஓவியர் இருந்தார். அதனால், நீ வாலி என வைத்துக்கொள் என அவரின் நண்பர் ஒருவர் சொல்ல தன் பெயரை வாலி என வைத்துக்கொண்டார். இந்த தகவலை வாலியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ படப்பிடிப்பின் போது தாக்குதல்!.. போலீஸிடம் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்ட நடிகை..

Next Story