Cinema News
பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஜயை அவர்கள் சில மணி நேரங்கள் நேரில் பார்ப்பதும், அவர் பேசுவதை கேட்பதும் இந்த விழாவில்தான்.
மாஸ்டர், பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் நடனமாடியும், ஜாலியாக பேசியும், குட்டி கதை சொல்லியும் ரசிகர்களை கவர்ந்தார். எனவே, விஜய் பட ரிலீஸுக்கு காத்திருப்பது போலவே, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஒருபக்கம் தனது எதிரிகளுக்கும், தன்னை விமர்சிப்பவர்களுக்கும் விஜய் பதிலடி கொடுக்கவும் அந்த மேடையை பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தளபதி தரிசனத்தை விட.. லியோ பிளாக் டிக்கெட் பிசினஸ் தான் முக்கியம்!.. விஜய் ரசிகர்களா இப்படி?..
விஜயே சூப்பர்ஸ்டார் என்கிற பேச்சு திரையுலகில் எழுந்த போது அதற்கு பதில் சொல்லும் விதமாக ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி பருந்து – காக்கா கதையெல்லாம் சொல்லி பரபரபரப்பை ஏற்படுத்தினார். அவர் யாரை சொன்னார்? அல்லது பொதுவாக சொன்னாரா? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், விஜயைத்தான் சொன்னார் என அவரின் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
எனவே, லியோ ஆடியோ லான்ச்சில் விஜய் இதற்கு பதில் சொல்வார் என அவரின் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், துவக்கம் முதலே இந்த நிகழ்ச்சி நடத்துவதில் பல குழப்பங்களும் நீடித்தது. மதுரை, துபாய், மலேசியா என பல இடங்களை தேர்ந்தெடுத்து பின் அது கைவிடப்பட்டு வருகிற 30ம் தேதி சென்னையிலேயே அதுவும் நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: இது அதுல்ல!.. போஸ்டர்களில் கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ்!.. லியோ பரிதாபங்கள்!..
அதேநேரம், இதற்கு இன்னும் அரசு அனுமதி தரவில்லை எனவும் செய்திகள் வெளியானது. ஒருபக்கம், இந்த படத்தின் வினியோக உரிமை தொடர்பாக சில அழுத்தங்களை சிலர் தருவதாகவும் செய்திகள் கசிந்தது. அதேபோல், இந்த விழாவில் ரசிகர்களுக்கு இடமில்லை. விஜயின் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே கலந்து கொள்ளப்போகிறார்கள் எனவும் சொல்லப்பட்டது. மேலும், அந்த டிக்கெட்டுக்களை சிலர் அதிக விலைக்கு விற்கும் செய்திகளும் வெளியானது.
இந்நிலையில்தான், அதிக பேர் டிக்கெட் கேட்பதாகவும், பாதுகாப்பு அம்சம் கருதியும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக இப்படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனம் நேற்று இரவு அறிவித்துள்ளது. அதேநேரம் இதில், அரசியல் அழுத்தங்கள் காரணம் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையான காரணம் இல்லை என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லியோ கதை இப்படித்தான் இருக்கும்!.. போஸ்டர்களிலேயே பொடி வைத்த லோகேஷ் கனகராஜ்.. செம தில்லுதான்!..