Connect with us
mr radha

Cinema History

கோபத்தில் எம்.ஆர்.ராதாவை பழிவாங்கிய இயக்குனர்!.. ஒன்றரை வருடம் படுக்கையில் கிடந்த நடிகவேள்..

சிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்க துவங்கியர் எம்.ஆர்.ராதா. பல நாடக கம்பெனிகளிலும் வேலை செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ரசிகர்களிடம் பிரபலமான நாடக நடிகராகவும் எம்.ஆர்.ரதா மாறினார். பொதுவாக சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர்கள் இயக்குனர்கள் என்ன சொல்வார்களோ அதை அப்படியே கேட்டு நடிப்பார்கள். அதே நடிகர் சினிமாவில் வளர்ந்த பின் இயக்குனர் சொல்வதை கேட்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி நடிக்க துவங்கிவிடுவார்கள். அதுவே ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கும் பிடித்துப்போய் படம் ஓடிவிட்டால் இயக்குனர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

எம்.ஆர்.ராதாவும் அப்படித்தான். பெரிய நடிகராக மாறிய பின் இயக்குனர்கள் சொல்வதையெல்லாம் கேட்க மாட்டார். அந்த காட்சிக்கு எப்படி நடிக்க வேண்டும் என தனக்கு தோன்றுகிறதோ அப்படி நடிப்பார். அவர் ஏன் இயக்குனர்களை மதிக்காமல் போனார் என்பதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.

இதையும் படிங்க: எப்படி இப்படி ஓப்பனா இருக்கீங்க?!. கேள்வி கேட்டவருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

நாடகங்களில் நடித்து வந்தவருக்கு 1937ம் வருடம் ராஜசேகரன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஈ.ஆர்.சகாதேவன் என்பவர் ஹீரோவாக நடித்தார். இப்படத்தின் இயக்குனர் ஆர்.பிரகாஷ் என்பவர் இயக்கினார். இவர் அமெரிக்காவில் இயக்கம் பற்றிபடித்துவிட்டு வந்த இளைஞர்.

MR Radha

MR Radha

ஒருநாள் படப்பிடிப்பில் ஹீரோ சகாதேவனுக்கு எப்படி நடிக்க வேண்டும் என எம்.ஆர்.ராதா சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து கோபமடைந்த பிரகாஷ் ‘நான் இயக்குனர? நீ இயக்குனரா?’ என கேட்க, எம்.ஆர்.ராதாவோ சிரித்தபடி ‘நீங்கள்தான் இயக்குனர். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?’ என கேட்க ‘அப்படியா?.. உன்னை பார்த்துக்கொள்கிறேன்’ என சொன்னார் பிரகாஷ்.

அடுத்தநாள் படப்பிடிப்பு துவங்கியதும் எம்.ஆர்.ராதாவை அழைத்த பிரகாஷ் ‘3வது மாடியிலிருந்து கீழே நிற்கும் குதிரை மீது குதித்து குதிரை ஓட்டி செல்ல வேண்டும். உன்னால் முடியுமா?’ என கேட்டிருக்கிறார். எம்.ஆர்.ராதாவிடம் யாராவது உன்னால் முடியுமா என கேட்டால் அதை செய்து காட்டுவார்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..

இயக்குனர் ஆக்‌ஷன் என சொன்னதும் அவர் சொன்னதுபோலவே 3வது மாடியில் இருந்து குதிரை மீது குதித்து அதை ஓட்டிச்சென்றார் எம்.ஆர்.ராதா. ஆனால், ‘காட்சி சரியாக வரவில்லை. இன்னொரு முறை குதி’ என பிரகாஷ் சொல்ல எம்.ஆர்.ராதாவுக்கு புரிந்துபோனது. ஆனாலும், மீண்டும் சரியாக நடித்து உன் மூக்கை உடைக்கிறேன் என நினைத்து மீண்டும் குதித்தார். இந்த முறை குதிரை கொஞ்சம் விலகிவிட்டதால் கீழே விழுந்தார். காலில் பெரிய காயமாகி மயக்கமடைந்தார்.

முழித்துப்பார்க்கும்போது எம்.ஆர்.ராதா மருத்துவமனையில் இருந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. ஒன்றரை வருடம் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இதுபற்றி ஒருமுறைய பேசிய எம்.ஆர்.ராதா ‘ அந்த சம்பவத்திற்கு பின் பிரகாஷை நானும் சந்திக்கவில்லை. அவரும் என்ன சந்திக்கவில்லை. அந்த சம்பவம் என் ஆழ்மனதில் பதிந்து போனது. நான் இயக்குனர்களை மதிக்காமல் போனதற்கு அந்த சம்பவமே முக்கிய காரணம்’ என வெளிப்படையாக சொல்லி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top