தீவிர கண்காணிப்பில் நடிகர் ரஜினி...உண்மை நிலவரம் என்ன?...

நடிகர் ரஜினி திடீரென நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, அவருக்கு என்ன பிரச்சனை... அவருக்கு என்னாச்சு என்கிற பதட்டம் அவரின் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

சில வருடங்களுக்கு முன்பு அவரின் உடல் நிலைபாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமெரிக்காவிலும் அவர் சிகிச்சை எடுத்துகொண்டார். எனவே, ஒவ்வொரு வருடமும் அவர் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வருகிறார்.

rajini

இந்நிலையில்தான் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஒவ்வொரு வருடமும் அவரின் உடல் பரிசோதனை செய்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு நாள் அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். சாதாரண உடல் பரிசோதனை எனில் எதற்கு ஒரு நாள் ரஜினி மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்தது.

67th-National-Film-Awards-Rajinikanth-thanks-bus-driver-friend-in

ஆனால், அவருக்கு Necrosis எனும் ரத்தகுழாய் திசு அழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் 5வது மாடியில் சாதாரண அறையில்தான் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர் எனவும், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஊடகங்கள் நேற்று இரவு அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது ‘நான் நலமாக இருக்கிறேன். நாளை மறுநாள் விடு திரும்பி விடுவேன்’ என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story