இப்படி பண்ணா எப்படிம்மா வாய்ப்பு கிடைக்கும்?!.. காட்டின கவர்ச்சியெல்லாம் வீணா போச்சே!..
இப்போதெல்லாம் பல நடிகைகளும் இன்ஸ்டாகிராம் மூலமே ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். சினிமா மற்றும் சீரியலில் நடிப்பதை விட கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே அவர்கள் நெட்டிசன்களை தங்கள் பக்கம் வளைத்துவிடுகிறார்கள்.
அப்படி ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் ஷிவானி. ஆனால், சரியான வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். அங்கு பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார்.
98 நாட்கள் அந்த வீட்டிலிருந்தும் இவர் ரசிகர்களை கவரவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். இத்தனைக்கும் அந்த படங்களில் இவருக்கு குறிப்பிடும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அந்த படத்திற்கு பின் ஷிவானி எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அதற்கு காரணமாக இருப்பதே அவர்தான் என சொல்கிறார்கள். அதாவது, சினிமாவில் நடிப்பது தொடர்பாக அவரிடம் யார் பேசினாலும் அவர் போனையே எடுப்பது இல்லையாம். திருப்பி அழைப்பதும் இல்லையாம். அதோடு, ஏதாவது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தால் குறைந்தபட்சமே ரூ.20 லட்சம் வேண்டும் என கேட்கிறாராம். அதனால்தான் எந்த வாய்ப்பும் இல்லாமல் அம்மணி வீட்டில் இருக்கிறார் என திரையுலகத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
இதெல்லாம் சரியா ஷிவானி?...