Thalapathy 68: விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று தளபதி 68 படத்தின் பூஜை தொடர்பான வீடியோ வெளியானது. பொதுவாக விஜய் ஒரு படத்தை முடிக்கும் நிலையில் அடுத்த படத்திற்கான வேலையை துவங்குவார். லியோ படம் முடியும் நிலையில் வெங்கட்பிரபு சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போக அதை டிக் அடித்தார்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது விஜயின் 68வது திரைப்படமாகும். இந்த படத்தில் ஜோதிகா, ஜெய் என பலரும் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால், அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் வந்தார்கள். சினேகா, மினாக்ஷி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, அஜ்மல் என பலரும் நடிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: ஆல்ரெடி ஆறு மாசமாச்சி!. அஜித் பண்ற வேலையில இன்னும் இழுக்கும்போல!. விடாமுயற்சி பரிதாபங்கள்!..
இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லியோ படம் திரையரங்கில் ஓடிவருகிறது. எல்லோரும் இந்த படம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எனவே, தளபதி 68 படம் தொடர்பான எந்த செய்தியும் வேண்டாம் என்றுதான் விஜய் நினைத்தார்.
ஆனால், லியோ படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுவருவதால் இந்த நேரத்தில் தளபதி 68 படத்தை வெளியிட்டால் லியோவை பற்றி பேசுவது குறைந்து எல்லோரும் தளபதி 68 பற்றி பேசுவார்கள் என்று நம்பித்தான் இந்த வீடியோவை இறக்கியுள்ளனர் என சினிமா உலகில் பேசிகொண்டார்கள்.
இதையும் படிங்க: ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…
ஆனால், அதில் உண்மையில்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய்க்கு கொடுத்த அழுத்தம்தான் காரணம். இதற்கு மேலும் அந்த வீடியோவை வைத்திருக்க முடியாது. மேலும், தளபதி 68 பட புரமோஷனையும் நாங்கள் துவங்கவேண்டும் என சொல்ல விஜயும் சம்மதித்து விட்டார் என சொல்லப்படுகிறது.
எப்படியே கடந்த பல மாதங்களாகவே ஒரே லியோ புராணமாக இருந்தது. இனிமேல் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என கணிக்கப்படுகிறது.
