வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் இதுதானாம்!.. இது தெரியாம போச்சே!...

by சிவா |
valimai2
X

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. ஒன்றரை வருடங்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இப்படம் துவங்கியது முதலே இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு கேட்டு ஒருகட்டத்தில் அவர்கள் ஓய்ந்தே போனார்கள்.

valimai-4

தற்போது இப்படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். முதலில் இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. அதன்பின், இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இரண்டும் இல்லாமல் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சென்றுவிட்டது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மற்ற பணிகளுக்கு இன்னும் 2 மாதங்கள் ஆனால் கூட தீபாவளிக்கு கண்டிப்பாக படத்தை ரிலீஸ் செய்ய முடியும். ஆனால், பொங்கல் விடுமுறைக்கு ஏன் தள்ளி வைக்கப்பட்டது என்கிற கேள்வி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகினர் பலருக்கும் எழுந்துள்ளது.

valimai

தற்போது அதன் பின்னணி தெரியவந்துள்ளது. அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா அஜித்தை வைத்து 3 திரைப்படங்களை இயக்கியவர். அஜித்தின் நெருங்கிய நண்பராகவே அவர் மாறிவிட்டார். எனவே, எனது இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படம் வெளியாகும் போது, உங்கள் படம் ரிலீஸ் ஆக வேண்டாம் என அவரே அஜித்திடம் கோரிக்கை வைத்தாராம்.

அதோடு, இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ள பிரபல ஃபைனான்சியர் மதுரை அன்பு ‘ஒன்று இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்கள்.. அல்லது பொங்கலுக்கு வெளியிடுங்கள்... இல்லையேல் எனக்கு இப்படம் வேண்டாம்’ என கறாராக கூற வலிமை படம் பொங்கலுக்கு தள்ளி சென்றுள்ளது என பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story