கிரேட் எஸ்கேப்!.. அஜர்பைஜானில் விடாமுயற்சி டீம் சந்தித்த பிரச்சனை.. அப்ப இதுதான் காரணமா
Vidamuyarchi: துணிவு படத்திற்கு பின் ஒருவழியாக அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தடம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். துணிவு படத்திற்கு பின் பல மாதங்கள் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப்போய்விட்டார்.
ஒருபக்கம் இப்படத்திற்கான கதையும் உறுதி செய்யப்படாமல் இழுத்துக்கொண்டே போனது. ஒரு வழியாக கடந்த மாதம் படக்குழு அஜர்பைசான் எனும் நாட்டுக்கு கிளம்பி சென்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், அர்ஜூன் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய், அஜித்தெல்லாம் ஓரமா போ!. புஷ்பா 2-வுக்கு அல்லு அர்ஜூன் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?..
இந்த படத்தின் படப்பிடிப்பை ஜனவரியிலேயே முடித்து விட வேண்டும் என நினைத்த அஜித் நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதம் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துங்கள் என இயக்குனரிடம் சொல்லிவிட்டார். அந்த திட்டத்தோடுதான் படக்குழுவும் அசர்பைசான் நாட்டுக்கு கிளம்பி சென்றது.
ஆனால், திடீரென 3 நாட்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது. இயக்குனர் மகிழ் திருமேனிக்கு தொடர்ந்து வேலை செய்து பழக்கமில்லை எனவும் சின்ன இடைவெளி விட்டு படத்தை துவங்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: பெரிய புளியங்கொம்பால பிடிச்சிருக்காரு! பிரபல நடிகரின் மகளை கரம் பிடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!
ஒருபக்கம், தளபதி 68 படக்குழுவும் அஜர் பைசான் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதால் விடாமுயற்சி டீம் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால், இது இரண்டுமே உண்மையில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. அசர்பைசான் பாலைவன பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நாடு.
அடிக்கடி அங்கு மணல் புயல் வருமாம். கடந்த வாரம் அங்கு மணல் புயல் என்பதால்தான் விடாமுயற்சி படக்குழு அசர்பைசான் நாட்டிலிருந்து கிளம்பிவிட்டதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினி – கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க