தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்தவர் விஜயகாந்த். 90களில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். சினிமாவில் ஆக்டிவாக இருக்கும்போதே அரசியலிலும் நுழைந்து கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு டஃப் கொடுத்தார்.
ஆனால், கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆக்டிவாக இல்லை. அவருக்கு என்னதான் பிரச்சனை என்பதை அவரது குடும்பத்தினரும் பொதுவெளியில் சொல்வது இல்லை. நிற்க முடியாமல், நடக்க முடியாமல், நேராக உட்கார முடியாமல், பேச முடியாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது உணர முடியாமல் இருக்கிறார் விஜயகாந்த்.
இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
அவரது உடல் நிலையில் பின்னடைவு. ஆனால், நன்றாகத்தான் இருக்கிறார் என அவரின் மகன் விஜயபிரபாகரன் சமீபத்தில் கொடுத்த பேட்டி விஜயகாந்த் ரசிகர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்நிலையில்தான் விஜயகாந்துடன் நெருங்கி பழகியவரும், நடிகருமான மீசை ராஜேந்திரன் ஊடகம் ஒன்றில் அவரின் உடல்நிலை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சட்டசபையில் ஜெயலலிதா பார்த்த ஒரே ஆண் மகன் விஜயகாந்த் மட்டுமே. நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசியதை அவரால் தாங்கி கொள்ளமுடியவில்லை. இனிமேல் உங்களுக்கு இறங்குமுகம்தான் என அங்கேயே சொன்னார். அடுத்த சில நாளில் விஜயகாந்தின் வீட்டிற்கு முன் சிலர் பூஜை செய்திருந்த ஆதாரங்கள் இருந்தது. மாந்திரீகம் செய்திருக்கலாம் என்பது என் கணிப்பு மட்டுமே. ஜெயலலிதாவும், சசிகலாவும் கடவுள் மற்றும் பூஜை விவகாரங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…
அதுதான் காரணமா என்பதும் தெரியவில்லை. அதோடு, விஜயகாந்த் கடுமையாக உழைக்க கூடியவர். ஒருமுறை பகலில் சேலத்திலும், சென்னையில் இரவிலும் என தொடர்ந்து 40 நாட்கள் ஒரு படத்தில் நடித்தார். வருடத்திற்கு 14 படங்களில் நடித்தார். சரியான ஓய்வு இல்லாமல் நடித்ததால் கூட அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதோடு, அரசியலில் அவர் சந்தித்த நம்பிக்கை துரோகங்கள் அவரை தூங்கவிடவில்லை. மன உளைச்சலை சந்தித்தார். ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தான் தூங்கினார். எல்லாம் சேர்ந்தும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என ராஜேந்திரன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: மகனுக்காக தானே களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திக்கும் அந்த நாள்
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…