Connect with us
viayakanth

Cinema News

நம்பிக்கை துரோகம்!. மனதில் ஏற்பட்ட வேதனை.. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது இப்படித்தான்!..

சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் போராடி வாய்ப்பை பெற்று ஹீரோவாக மாறியவர். இவரும் எ.ஜி.ஆரை போலவே ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். அரசியலுக்கு வருவேன் என தீர்க்கமாக அறிவித்து அரசியலுக்கு வந்தார். மதுரையில் கட்சியை துவங்கி தேர்தலை சந்தித்தார்.

vijayakanth

அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி 24 எம்.எல்.ஏக்களை பெற்று எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். சட்டசபையில் ஜெயலலிதாவை பார்த்து இவர் நாக்கை துருத்தி பேச அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேமுதிகவை ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் என களத்தில் இறங்கி காய்களை நகர்த்தினார். தேமுதிகவில் இருந்த எட்டு எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சென்றனர். இதனால் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்.

mla

இங்குதான் விஜயகாந்த் நம்பிக்கை துரோகத்தின் உச்சத்தை பார்த்தார். இளகிய மனசுகாரரான விஜயகாந்தால் இதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களாக தான் பார்த்து, பழகி, வளர்த்துவிட்டு, தேர்தலில் நிற்க வைத்து, அவர்களுக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்தால், என்னை அழிக்க நினைக்கும் ஒருவர் பக்கம் சென்று எனக்கே துரோகம் செய்துவிட்டார்களே என மனம் உடைந்து போனார். இதுவே அவர் மனம் பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம்.

vijayakanth

யாராக இருந்தாலும் சரி. உடல் பலத்தை விட மனபலம் மிகவும் முக்கியம். மனம் வலுவாக இல்லை எனில் உடலில் பலம் இருந்தும் பலனில்லை. மனம் சோர்ந்துவிட்டால் உடலும் சோர்ந்துவிடும். இதுதான் விஜயகாந்துக்கு நடந்தது. அதன்பின் அவரால் அரசியலில் பெரிதாக வளரமுடியவில்லை.

அடுத்து விஜயகாந்தை மிகவும் பாதித்த சம்பவம் அவரின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரின் மரணம். மதுரையில் ஒன்பதாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். சினிமாவில் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். விஜயகாந்த் நடிக்கும் படங்களை தேர்வு செய்வது முதல் விஜயகாந்தை மக்களிடம் எப்படி புரமோட் செய்ய வேண்டும்.. படிப்படியாக அவரை எப்படி வளர்க்க வேண்டும் என கச்சிதமாக திட்டம் போட்டு செயல்பட்டவர். விஜயகாந்துக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்.

ஆனால்,  விஜயகாந்தை திருமணம் செய்து கொண்ட பிரேமலதா இப்ராஹிம் ராவுத்தரை ஒதுக்கி வைத்தார். துணைக்கு அவரின் தம்பி சதீஷை வைத்துக்கொண்டார். விஜயகாந்தோடு பேச கூட ராவுத்தரை அவர் அனுமதிக்கவில்லை. விஜயகாந்த் – ராவுத்தர் சந்திப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொண்டார். பிரேமலதாவின் முடிவை விஜயகாந்த் எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதும் தெரியவில்லை. ‘நண்பனுக்காக எல்லாமுமாக இருந்தோம். அவன் நம்மை கைவிட்டு விட்டானே’ என்கிற சோகம் ராவுத்தரை வாட்டியது. நொடிந்து போனார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் திருமணத்தில் இளையராஜா செய்த கலாட்டா!. அவர் அப்பவே அப்படித்தான்!..

உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு ஏற்பட்ட பிறகும் ‘நண்பனே விட்டுவிட்டான். இனிமேல் வாழ்ந்து என்ன ஆகப்போகிறோம்’ என நினைத்து அவர் சிகிச்சை கூட எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் கோமா நிலைக்கு சென்றார். அவர் கோமாவில் இருக்கும் போது விஜயகாந்த் சென்று பார்த்தார். ‘ராவுத்தரு.. ராவுத்தரு’ என விஜயகாந்த் கலங்கியும் அவரின் கண்கள் திறக்கவில்லை. அது நடந்து சில நாட்களில் இப்ராஹிம் ராவுத்தர் இறந்துவிட்டார்.

vijayakanth

அவரின் மரணமும் விஜயகாந்தை வெகுவாக பாதித்தது. ‘நமக்காக எல்லாமும் செய்த நண்பனை விட்டு விட்டோமே!.. அவனை காப்பாற்ற முடியவில்லையே.. அவன் போய் விட்டானே.. அதற்கு நான்தான் காரணமா?’ என்கிற குற்ற உணர்ச்சி, வருத்தம் எல்லாம் வலியாக மாறி படுவேதனையாக விஜயகாந்தின் மனதில் நிரந்தரமாக தங்கிப்போனது. நாளடைவில் அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவர் செய்த தானங்களும், தர்மமும் கூட அவரை காப்பாற்றவில்லை.

மொத்தத்தில் நம்பிக்கை துரோகங்களும், நண்பனின் மரணமும் விஜயகாந்த் எனும் இரும்பு மனிதனை உலுக்கி போட்டது. அதிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை.

மனது முழுக்க வலி இருக்கும்போது என்ன சிகிச்சை கொடுத்து என்ன ஆகப்போகிறது!..

இதையும் படிங்க: கிடப்பில் போடப்பட்ட விஜயகாந்த் படம்!.. இது மட்டும் வந்திருந்தா அவர் நிலமையே வேற!..

google news
Continue Reading

More in Cinema News

To Top