நீ இதை செஞ்சிருந்தா நான் வந்திருப்பேன்!.. ராமராஜனிடம் கோபப்பட்ட இளையராஜா!. சாமானியன் பிளாஷ்பேக்!..

0
474
ramarajan

மக்கள் நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராமராஜன். 50 படங்களுக்கும் மேல் உதவி இயக்குனராக வேலை செய்து விட்டு 5 படங்களை இயக்கிவிட்டு அதன்பின் நடிகரானவர் ராமராஜன் என்பது பலருக்கும் தெரியாது. ராமராஜன் நடித்ததில் பெரும்பாலானவை கிராமத்து படங்கள்தான்.

ஏனெனில், ராமராஜன் படங்கள் கிராமபுறங்களில்தான் அதிகம் ஓடியது. அதாவது பி மற்றும் சி செண்டர்களில் அதிக வரவேற்பை பெற்றது. அதனால் தொடர்ந்து கிராமபுற கதைகளில் மட்டுமே அதிகம் நடித்தார் ராமராஜன். ராமராஜனின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இசைஞானி இளையராஜாவின் இசைதான்.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸிடம் மட்டும் பிரச்னை செய்யும் இளையராஜா… குணா படத்தில் செய்த ஏமாற்று வேலை…

ராமராஜனின் படங்களில் இளையராஜாவின் இனிமையான பாடல்கள் இடம் பெற்றிருந்தது. தனது படங்களை காக்க வந்த கடவுளாகவே இளையராஜாவை பார்த்தார் ராமராஜன். ஒவ்வொரு படம் நடிக்கும்போது இளையராஜாவை சந்தித்து அவரின் ஆசையை வாங்கி விடுவார் ராமராஜன்.

கரகாட்டக்காரன் உட்பட ராமராஜன் நடிப்பில் வெளிவந்த 90 சதவீத படங்களுக்கு இசை இளையராஜாதான். 12 வருடங்களுக்கு பின் ராமராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது சாமானியன். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசை. பல வருடங்களுக்கு பின் ராமராஜன் படம் வெளியானதால் அது எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்கிற எதிர்பார்ப்பு திரையுலகில் இருந்தது.

இதையும் படிங்க: இளையராஜா பாடலாசிரியரை இப்படித்தான் நடத்துவார்! எழுத்தாளார் ஜெயமோகன் காரசார பேட்டி

ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. 6 கோடியில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் 20 லட்சத்தை தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. மொத்தத்தில் ராமராஜனின் ரீ எண்ட்ரி வெற்றியாக அமையவில்லை. சாமானியன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் வெளியானது. ஆனால், அதில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.

அதற்கான காரணத்தை ராமராஜனே ஊடகம் ஒன்றில் சொல்லி இருக்கிறார். சாமானியன் படத்தில் அதிக பாடல்கள் இல்லை. குறிப்பாக இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களில் இருந்தது போல பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. விழாவுக்கு வருமாறு ராமராஜன் நேரில் சென்று அழைத்தபோது ‘படத்துல் 7 பாட்டு இருந்திருந்தா நான் வந்திருப்பேன்’ என சொல்லி விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம் ராஜா.

google news