அரசியல் கணக்குலாம் ஒன்னுமில்ல!. ஜனநாயகன் ரிலீஸ் தள்ளி போக காரணம் இதுதானாம்!…

#image_title
Jananayagan: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம்தான் ஜனரஞ்சகன். விஜய் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின் நடிக்கும் படம் என்பதால் இதுவே அவரின் கடைசிப்படமாக அமைந்துவிட்டது. எனவே, விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். மேலும், வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. தமிழுக்கு ஏற்றார் போல கொஞ்சம் மாற்றம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, இந்த படத்திற்கு பின் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறவிருப்பதால் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகளும், பாடல்களும் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி 3 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. படம் விரைவில் முடிந்துவிடும் என்றாலும் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதிதான் படம் ரிலீஸ் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

எதற்காக இவ்வளவு மாதம் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்கிற கேள்வி எழுந்தது. விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருப்பதால் ஜனவரி மாதம் இந்த படம் வெளியானால் அவரின் அரசியலுக்கும் இது உதவும் என விஜய் கணக்கு போட்டதாக சொல்லப்பட்டது. அதோடு, 2026 சட்டமன்ற தேர்தல் தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் என்பதால் விஜய் பொங்கல் ரிலீஸை திட்டமிட்டதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது அதில் உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இப்போதெல்லாம் சின்ன நடிகர்களோ, பெரிய நடிகர்களோ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. ஓடிடி நிறுவனங்களே முடிவு செய்கிறது. நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்கள் என்ன தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என சொல்கிறார்களோ அப்போதுதான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். ஏனெனில், ஓடிடி மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரும் தொகை கிடைக்கிறது.
இந்த படத்தின் உரிமையை 110 கோடிக்கு வாங்கியிருக்கிறது அமேசான் பிரைம் நிறுவனம். இந்த வருடம் முழுக்க படங்களை வெளியிடும் லிஸ்ட் முடிந்துவிட்டதால் 2026 என்றால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என அமேசன் பிரைம் சொல்ல ஜனநாயகனின் ரிலீஸ் அடுத்த வருடம் தள்ளி போயிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.